இம்ராஹிம் ரைசி மரணத்தைக் கொண்டாடும் ஈரான் நாட்டுப் பெண்கள்! வைரல் வீடியோ!
ஈரானியர்கள் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் அவர் மரணம் அடைந்திருப்பார் என்ற எதிர்பார்ப்பில், மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் வீடியோவும் வெளிவந்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவல் வெளியானதுமே ஈரான் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடத் தொடங்கிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது என்ற செய்தி வெளியான பிறகு, அந்நாட்டுப் பெண்கள் பலர் சாலையில் சென்ற கார்களை நிறுத்தி, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.
இதேபோல இன்னும் சில ஈரானியர்கள் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் அவர் மரணம் அடைந்திருப்பார் என்ற எதிர்பார்ப்பில், மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் வீடியோவும் வெளிவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள பெண்களில் ஒருவர், சர்வாதிகாரியும், பழமைவாதியுமான இப்ராஹிம் ரைசியின் மரணத்தை நான் கொண்டாடவில்லை. ஆனால், இரங்கல் தெரிவிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். ஹெலிகாப்டர் விபத்தில் ரைசி மரணம் அடைந்திருப்பார் என்ற ஈரான் மக்களின் நம்பிக்கை பலிக்கட்டும் என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணையின் திறப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவுடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் ஹெலிகாப்டர் ஈரான் புறப்பட்டார்.
அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் மூத்த உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்நிலையில், ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் ஜோல்பா நகர் அருகே சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
கிட்டத்தட்ட 15 மணிநேரத்திற்குப் பிறகு ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரபூர்வ அறிவிப்பு