ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசர்பைஜானில் அணை திறப்பு விழாவுக்குச் சென்று திரும்பும் வழியில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் மரணம் அடைந்துள்ளார்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசர்பைஜானில் அணை திறப்பு விழாவுக்குச் சென்று திரும்பும் வழியில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இப்ராஹிம் ரைசி ஈரான் நாட்டின் உச்ச தலைவருக்கு அடுத்த அதிக அதிகாரம் படைத்த பதவியில் இருந்தவர். பழமைவாத மனப்பான்மை கொண்டவரான அவர், இஸ்லாமிய அறிஞர், நீதிபதி, அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணையின் திறப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவுடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின் ஹெலிகாப்டர் ஈரான் புறப்பட்டார்.
அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் மற்றும் மூத்த உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்நிலையில், ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் ஜோல்பா நகர் அருகே சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
இதனால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஈரான் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று ஹெலிகாப்டரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மலைப்பகுதியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது.
சுமார் 15 மணிநேரத்திற்குப் பிறகு ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி - என்ன நடந்தது?