இந்திய-சீன உயர் ராணுவ அதிகாரிகள் இடையேயான பேச்சு வார்த்தை நிறைவு..!! முழு விவரம் உள்ளே..!!
இருநாடுகளும் இடையேயான தகவல் பரிமாற்றம் சிறப்பாக உள்ளது, எனவே இதில் மூன்றாவது தரப்பு தலையீடு தேவையில்லை எனக் சீனா சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லீ லிஜியான் அமெரிக்காவை புறக்கணித்தார்.
இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு உயரதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்த நிலையில் அது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, சீன எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள மோல்டோவில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அது நிறைவுற்று 14 கார்ப்பஸ் கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்திய தூதுக்குழு லேவுக்கு திரும்பி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த மே 5 ஆம் தேதி லடாக் எல்லைப்பகுதியான பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன படையினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து இருநாட்டு உள்ளூர் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதற்றம் தணிந்தது, அதேபோல் மே 9 ஆம் தேதி சிக்கிம் எல்லைப்பகுதியான நகுலா பாஸ் பகுதியில் இரு நாட்டு படை வீரர்களும் மோதிக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மே 22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்து விட்டதாக கூறி சீனா அங்கு ஏராளமான படைகளை குவிக்க தொடங்கியது, இந்தியாவும் பதிலுக்கு படைகளைக் குவித்துவந்த நிலையில் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 27ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப் கூறினார். எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு சீன தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா பதிலளித்தது, இதற்கிடையில் இந்திய-சீன எல்லை நிலவரம் பொதுவாக கட்டுப்படுத்தக்கூடியது, இருநாடுகளும் இடையேயான தகவல் பரிமாற்றம் சிறப்பாக உள்ளது, எனவே இதில் மூன்றாவது தரப்பு தலையீடு தேவையில்லை எனக் சீனா சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லீ லிஜியான் அமெரிக்காவை புறக்கணித்தார்.
அமெரிக்க அதிபரின் அறிவிப்பை இரு நாடுகளும் புறக்கணித்ததைத் தொடர்ந்து இரு நாட்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 12 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்நிலையில் 14 கார்ப்பஸ் கமாண்டர் அளவிலான இந்தோ-சீன பேச்சுவார்த்தை சனிக்கிழமை சீன எல்லைப் பகுதியில் உள்ள மோல்டோவில் நடைபெற்றது, 14 கார்ப்பஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லியு லினுடன் இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது, இரு தரப்பிலிருந்தும் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர், இந்நிலையில் காலை தொடங்கிய பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்த நிலையில் அது நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவில் கல்வான் பள்ளதாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவத்தை சேர்ந்தவர்கள் பின்வாங்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன படைகளின் பின்வாங்குதல் நடவடிக்கையை தொடர்ந்து லடாக் எல்லை பகுதியில் பதற்றம் படிப்படியாக தணியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.