இந்திய பாஸ்போர்ட் இருக்கா?.. அப்போ 1000 டாலர் கட்டணம் கட்டியே ஆகணும் - பயணிகளுக்கு புது ரூல்ஸ் போட்ட நாடு!

பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விசா என்பது ரொம்பவும் முக்கியம். அதேபோல அந்த விசாவை எடுக்க நிச்சயம் சில ஆயிரம் ரூபாய்களை நாம் கட்டணமாக கட்ட வேண்டும் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. 

Indians and African country passport holders must pay 1000 dolor while visiting this country ans

அந்த வகையில் மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடார், இப்பொது ஆப்பிரிக்கா அல்லது இந்தியாவிலிருந்து வரும் பயணிகளிடம் $1,000 கட்டணம் வசூலிக்கிறது, இது மத்திய அமெரிக்க நாடு வழியாக அமெரிக்காவிற்கு இடம்பெயர்வதைத் தடுக்கும் முயற்சியில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா அல்லது 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து, அந்நாட்டு பாஸ்ப்போர்ட்டுடன் பயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்த கடமைப்பட்டிருப்பார்கள் என்று எல் சால்வடார் துறைமுக நிர்வாகம் கடந்த அக்டோபர் 20ம் தேதியிட்ட அதன் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விசா சேவைகள் மீண்டும் தொடக்கம்: இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பு!

இதன் மூலம் திரட்டப்படும் பணம், நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. எல் சால்வடார் ஜனாதிபதி நயிப் புகேலே இந்த வாரம் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளரான பிரையன் நிக்கோல்ஸைச் சந்தித்து "ஒழுங்கற்ற இடம்பெயர்வுகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள்" பற்றி விவாதித்தார். 

செப்டம்பரில் முடிவடைந்த 2023 நிதியாண்டில், அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைக் காவல் நாடு முழுவதும் 3.2 மில்லியன் புலம்பெயர்ந்தோரை சந்தித்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களில் இருந்து பல புலம்பெயர்ந்தோர் மத்திய அமெரிக்கா வழியாக அமெரிக்காவிற்கு வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

ஆகையால் இந்த புதிய கட்டணம் கடந்த அக்டோபர் 23 முதல் நடைமுறைக்கு வந்தது என்றும், மற்றும் நாட்டின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக விதிக்கப்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள 57 நாடுகளில் இருந்து வரும் பயணிகளைப் பற்றி தினமும் சால்வடோர் அதிகாரிகளுக்கு விமான நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்என்றும் ஆணையிடபட்டுள்ளது.

சீனப் பெண் செய்த தவறு.. சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரத் தடை - ஏன்? வெளிநாட்டு ஊழியர்களே கவனம் தேவை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios