Asianet News TamilAsianet News Tamil

சீனப் பெண் செய்த தவறு.. சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரத் தடை - ஏன்? வெளிநாட்டு ஊழியர்களே கவனம் தேவை!

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த 29 வயதான சீனப் பெண் ஒருவர், சிங்கப்பூரில் உள்ள செவிலியரை வாய்மொழியாகத் திட்டியதால் அவருக்கு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர், மனிதவளச் சட்டத்தை மீறியதால், சிங்கப்பூரில் பணிபுரிய அவருக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Chinese women abused nurse in singapore faces permanent work ban from singapore says mom ans
Author
First Published Oct 27, 2023, 4:32 PM IST | Last Updated Oct 27, 2023, 4:32 PM IST

Han Feizi என்ற அந்த சீன நாட்டு பெண் மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன, வேலை அனுமதிச் சீட்டுக்கான விண்ணப்பத்தில், KDL Elements என்ற நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிவதாக அவர் தவறாக அறிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லலால் அவர் கடந்த ஆகஸ்ட் 1, 2023 முதல் அக்டோபர் 11, 2023 வரை பல்வேறு இடங்களில் ஃப்ரீலான்ஸ் ஹோஸ்டஸாகப் பணிபுரிந்ததாகவும், சரியான பணி அனுமதி இல்லாமல் சுயதொழில் செய்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஹான் தன் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார், மேலும் அவர் மேல் சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டு, தண்டனையின் ஒரு பகுதியாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது. MOM செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் பேசியபோது, தண்டனை காரணமாக ஹானின் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டதாகவும், அவர் சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரமாகத் தடை செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.

"கிட்டத்தட்ட 50" இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொல்லப்பட்டிருக்கலாம்? ஹமாஸ் வெளியிட்ட பயங்கர தகவல் - உண்மையா?

பணி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்கள், அவர்களின் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேலைகளில் மட்டுமே பணியமர்த்தப்பட முடியும் மற்றும் நியமிக்கப்பட்ட முதலாளிக்கு மட்டுமே வேலை செய்ய முடியும் என்பது சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்தின் விதி. இதனை மீறும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

அனைத்து விண்ணப்பதாரர்களும் துல்லியமான மற்றும் முழுமையான அறிவிப்புகளைச் செய்ய வேண்டும்.
தவறான அறிவிப்பை வெளியிடுவது கடுமையான குற்றமாகும், இது S$20,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படும். குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

அதுமட்டுமல்லாமல் கடந்த அக்டோபர் 13 அன்று, சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் தி செயில் மெரினா பே ஆகியவற்றில் நடந்த சம்பவங்களுக்காக ஹான் மீது 6 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்த செவிலியர் ஒருவரை ஹான் திட்டியதும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

மற்றொரு கோவிட் பெருந்தொற்று ஆபத்து? இதுவரை பார்த்திராத 8 வைரஸ்கள் கண்டுபிடிப்பு.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios