இலங்கை செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்..
இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இந்திய ரூபாயில் பணம் செலுத்த முடியும் என இலங்கை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (FICCI) ஏற்பாட்டில் “இலங்கையின் பொருளாதார சூழ்நிலை : தற்போதைய நிலை மற்றும் முன்னோக்கி செல்லும் வழி” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய இலங்கை ரிசர்வ் வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க “ இலங்கையின் மத்திய வங்கி, இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யும் முடிவை எடுத்துள்ளது. எனவே இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்த முடியும். வர்த்தக குடியேற்றங்கள் மற்றும் நிதி பரிமாற்றங்களுக்காக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஒரு மாபெரும் முன்னேற்றமாக இருக்கும். இந்தியா - இலங்கை இடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். ” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடு..! இல்லைனா பதவியை ராஜினாமா செய்.! ஸ்டாலினுக்கு எதிராக சீறும் ஆர் பி. உதயகுமார்
இதனிடையே இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்பு (TAFI), இலங்கையின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. இந்திய டிராவல் ஏஜெண்ட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் திரு. அனில் பஞ்சாபி, வெளிநாட்டில் இந்திய நாணயம் (ரூபாய்) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது ஒரு பெரிய செய்தி. "இது வரவிருக்கும் நாட்களில் நமது பொருளாதாரத்தை வலிமையாக்கும், எதிர்காலத்தில் இன்னும் பல நாடுகளும் ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். இலங்கை சுற்றுலாவிற்கு ஒரு அற்புதமான நாடு, இது இப்போது இந்த உலகின் இந்த பகுதியிலிருந்து அந்த தீவு நாட்டில் சுற்றுலாவிற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன, நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் கோயிலுக்கு சிறப்பு தபால் தலை மற்றும் அஞ்சல் அட்டையை வெளியிட்டார். இந்த கோயில், ராமாயண காவியத்தில், ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் சென்ற போது, ராவணன் சீதையை கவர்ந்து இலங்கையில் உள்ள அசோக வனத்தில் வைத்திருந்திருந்தார். சீதை இருந்த அசோக வனம் தற்போது சீதை எலிய என அழைக்கப்படுகிறது. இது தற்போது இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ரூபாயை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இலங்கைக்கு வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமானோர் இந்தியர்களாக உள்ள்னர். இம்மாதம் (ஏப்ரல்) முதல் 23 நாட்களில் சுமார் 13,839 இந்தியர்கள் இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர், இது இலங்கைக்கு வந்த மொத்த வெளிநாட்டவர்களில் 17 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சூடானில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் டெல்லி வந்தது.. போர் குறித்து இந்தியர்கள் சொன்ன தகவல்