Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்கா.. வீட்டிற்குள் நான்கு உடல்கள்.. இறந்தவர்கள் இந்திய வம்சாவளியினர் என்று கண்டுபிடிப்பு - என்ன நடந்தது?

New York : அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியும் அவர்களது இரண்டு குழந்தைகளும் அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Indian Origin Americans couples and two kids found dead in their house police investigation starts ans
Author
First Published Oct 7, 2023, 7:09 PM IST | Last Updated Oct 7, 2023, 7:09 PM IST

தேஜ் பிரதாப் சிங் (வயது 43), மற்றும் சோனல் பரிஹார் (வயது 42), ஆகியோர் கடந்த புதன் கிழமை மாலை 4:30 மணிஅவர்களது ப்ளைன்ஸ்போரோ வீட்டில் அவர்களது 10 வயது மகன் மற்றும் 6 வயது பெண் குழந்தையுடன் இறந்து கிடந்ததாக ப்ளைன்ஸ்போரோ பகுதி காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த "அக்டோபர் மாதம் 4ம் தேதி மாலை, ப்ளைன்ஸ்போரோவில் உள்ள ஒரு இல்லத்தில் சோதனைக்காக அதிகாரிகளுக்கு 911 மூலம் அழைப்பு வந்தது. உடனே அங்கு சென்ற அதிகாரிகள் மற்றும் ப்ளைன்ஸ்போரோ காவல் துறை, அந்த வீட்டில் நான்கு பேர் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர்" என்று அவர்கள் வெளியிட்ட  கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் கடும் மோதல் : ” இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்கும்..” பிரதமர் மோடி ட்வீட்

"இந்த சோகமான சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது, மேலும் பிரேத பரிசோதனைகள் இன்று செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆரம்பகட்ட விசாரணையில், இந்த இறப்பு சம்பவத்தால் பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் CCTV வசதி கொண்டவர்கள் உடனே ப்ளைன்ஸ்போரோ காவல் துறையை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்பகுதி மேயர் பீட்டர் கான்டு மற்றும் பொது பாதுகாப்பு இயக்குனர் ஈமான் பிளான்சார்ட் ஆகியோரின் கூட்டுச் செய்தியில், ப்ளைன்ஸ்போரோ சமூகத்தின் இதயங்கள் நொறுங்கும் அளவிற்கு இந்த பேரிடியாக சம்பவம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். "இந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் அனைவரும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பது புரிந்துகொள்ள முடியாதது" என்று கூறினார்.

ப்ளைன்ஸ்போரோ போலீஸ் அதிகாரிகள் தற்போது தங்கள் சட்ட அமலாக்க சகாக்களுடன் இணைந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். "இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு என்பதையும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான கூடுதல் கவலைகள் எதுவும் இல்லை என்பதையும் உறுதியளிப்பதாகவும் கூறினார்.

பாலஸ்தீன போராளிகளின் அட்டூழியம்.. அரை நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட இஸ்ரேலிய பெண்ணின் உடல் - கொடுமையின் உச்சம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios