இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி ரெட்டி என்பவர் ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். . இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பங்கேற்றுள்ளார். ஆனால் அன்றைய தினம் இரவு அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய தங்கை நித்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதே நேரத்தில்  ப்ரீத்தியின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அவருடைய குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் ப்ரீத்தியின் கார் கிங்ஸ்போர்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை அறித்து அங்கு சென்றனர்.

அந்த காரின் பின்பகுதியை திறந்த பொழுது ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. அதனுள் ப்ரீத்தி கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார். இதையடுத்து  ப்ரீத்தியின் உடலை கைப்பற்றிய போலீஸ் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ப்ரீத்தி ரெட்டி மருத்துவர் மாநாடு முடிந்த பின்னர் தனது  முன்னாள் காதலன் ஒருவருடன் ஹோட்டலில்  அறை எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது.

அதுமட்டுமல்லாமல் ப்ரீத்தியின் தற்போதைய  காதலனும் ஒரு பல் மருத்துவர் எனவும் அவரும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் தான்  ப்ரீத்தி ரெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ப்ரீத்தி ரெட்டி தங்கியிருந்த ஹோட்டல் எதிரே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்ததில் அவர் முன்னாள் காதலனுடன் அறைக்கு செல்வது தெரிய வந்தது. மேலும் அவரது தற்போதைய காதலனானா பல் மருத்துவரும் ஹோட்டலுக்குள் சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது.

முன்னாள் காதலனுடன் ப்ரீத்தி ரெட்டி அறை எடுத்து தங்கியதால், தற்போதைய காதலன் ஆத்திரத்தில் கொலை செய்தாரா ?  அல்லது முன்னாள் காதலன்தான் அவரை கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.