பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில் ரஃபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்வதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்   பிரான்ஸ் விரைந்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து, சீனா, பாகிஸ்தான் நாடுகள் இந்தியாவுக்கு எதிரான பல்வேறு தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறுவதுடன் இந்தியாவிற்கு போர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு துறை வேகம்காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு பிரான்சிடம் சுமார்  60 ஆயிரம்  கோடி  ரூபாய் மதிப்பீட்டில் ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.

தற்போது அதற்கான 36 போர் விமானங்கள் தயார் நிலையில் இருப்பதால், அந்த விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. பிரான்ஸ்சின் பார்டியாக்ஸ்  துறைமுகநகரிலிருந்து கடல்மார்க்கமாக இந்தியாவுக்கு போர் விமானங்கள் கொண்டுவரப்பட உள்ளது. முன்னதாக விமானங்களுக்கு பூஜை போடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்ள  மூன்று நாள் அரசு முறை பயணமாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் விரைந்துள்ளார்.  அங்கு,  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரனை சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த உறவுகள் குறித்து  கலந்தாலோசிப்பதுடன், இரு நாட்டி உறவுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.  இந்தியாவுக்கும் பிரான்ஸ் போர் விமானங்கள் வழங்கி இருப்பது  சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.