சாதாரண சுவாசத்தின் மூலமாகவும் கொரோனா பரவும் ஆபத்து..!! எப்போதும் முகக்கவசம் அவசியம் என எச்சரிக்கை..!!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது  இந் நிலையில் மக்கள் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கும் கருத்துக்களை பின்பற்றி நடக்க வேண்டும் . 

Indian health deportment alert to wearing mask for all time to protect corona

சுவாசப் பிரச்சனை இல்லாதவர்கள்கூட வீட்டில் இருக்கும் போதும் வீட்டில் விட்டு வெளியேறும் போதும் முக கவசம் அணிய வேண்டும் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது .  கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரசால் சுமார் 2900 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரையில் 68 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் இந்திய சுகாதார துறை அமைச்சகம் சில பரிந்துறைகளை வழங்கி உள்ளது .  தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது  இந் நிலையில் மக்கள் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கும் கருத்துக்களை பின்பற்றி நடக்க வேண்டும் . 

Indian health deportment alert to wearing mask for all time to protect corona

குறிப்பாக சுவாச பிரச்சினைகள் இல்லாதவர்கள்கூட வீட்டில் தயாரிக்கும் முகமூடிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது,   தற்போது முகமூடி கையுறைகள் போன்றவற்றிற்கு  உலக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர், இந்நிலையில் மக்கள் பாதுகாப்பு அம்சங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும் .  முறையாக மக்கள் கைகழுவுதல் ,  அதற்கு முறையான சுத்திகரிப்பான்களை பயன்படுத்துதல் ,  மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் முகக் கவசம்  அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மிக மிக அவசியம் என தெரிவித்துள்ளது .  முக கவசங்களை சோப்பு அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவி அதை மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.  

Indian health deportment alert to wearing mask for all time to protect corona

பயன்படுத்தும் முககவசங்கள் வாய் மற்றும் மூக்கை மறக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அதேபோல் பயன்படுத்திய முக கவசங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது எனவும் எச்சரித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம் ,  அதை ஒவ்வொருமுறை பயன்படுத்துவதற்கு முன்னும் நன்கு துவைத்து தூய்மையாக பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது .  தற்போது கொரோனா வைரஸ் சாதாரண சுவாசத்தின் மூலமாகவும் பரவக்கூடும் எனவே அதை தவிர்க்க ,  அனைவரும் மூக்கு மற்றும் வாயை முகக் கவசம் கொண்டு மூடுவது சிறந்தது என எச்சரித்துள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது .
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios