உட்கார்ந்த இடத்தில் இருந்தே பாகிஸ்தானை துவம்சம் செய்ய முடியும்..!! அமெரிக்காவை அதிரவைத்த இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர்..!!
இனிய தீவிரவாதிகள் முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்கு செல்ல தேவையில்லை இந்தியாவில் இருந்தபடியே அவைகளையே அழித்து விடலாம் என தெரிவித்தார் .
இந்தியா நினைத்திருந்தால் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அவர்களின் ராணுவ தளங்களை தாக்கியிருக்க முடியும் ஆனால் இந்தியா அப்படி செய்யவில்லை காரணம் இந்தியா சகிப்புத்தன்மை கொண்ட நாடு என்பதுதான் அதற்கு காரணம் என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் . அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்து பேசியதற்கு பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார் . இந்திய- அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டாவது பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடைபெற்றது இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது என்றார் பாதுகாப்பு, ராணுவ நல்லுறவு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தான் , ஆப்கன் , நேபாளம் , இலங்கை , உள்ளிட்ட நாடுகளில் நிலவும் நிலை குறித்து ஆலோசித்ததாகவும் கூறினார் . இதையடுத்து வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பின்னர் நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் ராணுவ வலிமை அதிகரித்து வருகிறது , இந்தியா விரும்பினால் பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளை தாக்கி இருக்கலாம் ஆனால் அது பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பயங்கரவாத பயிற்சி முகாம்களை மட்டும் குறிவைத்து தாக்க்கினோம் என்றார்.
பாகிஸ்தானில் ஒரு குடிமகன் கூட கொல்லப்படவில்லை , பாகிஸ்தானின் ராணுவ தளத்தையும் அளிக்கவில்லை , ஒரு நாட்டின் இறையாண்மையை இந்தியா மதிக்க விரும்புகிறது இதுதான் இந்தியாவின் குணம் . இந்திய ராணுவம் முதல் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுள்ளது , இனிய தீவிரவாதிகள் முகாம்களை அழிக்க நாம் பாகிஸ்தானுக்கு செல்ல தேவையில்லை இந்தியாவில் இருந்தபடியே அவைகளையே அழித்து விடலாம் என தெரிவித்தார் . வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டினார் . ஆனால் பதிலுக்கு கார்கில் போரை அவர்கள் பரிசாகக் கொடுத்தனர் . பிரதமர் மோடியும் பாகிஸ்தானுடன் சுமுக உறவை விரும்பினார் பிறகு பதிலுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவர் என்றார்.