ரியோ ஜிம் உரிமையாளரான ஹர்பால் ரந்தாவா, விமானியாக இருந்த அவரது மகன் அமர் உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
ஜிம்பாப்வேயில் நடந்த விமான விபத்தில் இந்திய கோடீஸ்வரரும் சுரங்க அதிபருமான ஹர்பால் ரந்தாவா மற்றும் அவரது 22 வயது மகன் அமர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இந்த கோர விபத்து நடந்துள்ளது. அவர்கள் தங்கள் சொந்த விமானத்தில் தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச் சுரங்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தங்கம், நிலக்கரி, நிக்கல் மற்றும் தாமிரத்தை சுத்திகரிக்கும் ரியோ ஜிம் (RioZim) சுரங்க நிறுவனத்தின் உரிமையாளர் ஹர்பால் ரந்தாவா. ரந்தாவா 4 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிகத்தை மேற்கொண்டுவரும் ஜெம் ஹோல்டிங்ஸ் (GEM Holdings) நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.
மருத்துவ நோபல் பரிசு 2023: கொரோனா தடுப்பூசிக்கு வழிவகுத்த இரு விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
ரியோஜிம் நிறுவனத்தின் செஸ்னா 206 விமானத்தில் ரந்தாவாவுடன் அவரது மகன் அமர் உள்பட 6 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் ஹராரேயில் இருந்து முரோவா வைரச் சுரங்கத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. ஒற்றை எஞ்சின் கொண்ட விமானம் முரோவா டயமண்ட்ஸ் சுரங்கம் அருகே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
திரைப்படத் தயாரிப்பாளர் ஹோப்வெல் சினோனோ, ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தனது நண்பரான ரந்தவாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "விமான விபத்தில் ரியோ ஜிம் உரிமையாளரான ஹர்பால் ரந்தாவாவின் மறைவு குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். விமானியாக இருந்த அவரது மகன் உட்பட மேலும் 5 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்" என்று தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு முதல் முறையாக ஹர்பால் ரந்தாவாவை முதலில் சந்தித்ததாகவும் அதன்பிறகு தினமும் வாக்கிங் செல்லும்போது அவருடன் உரையாடி வந்ததாகவும் சினோனோ நினைவுகூர்ந்திருக்கிறார். ரந்தாவா மிகவும் தாராள மனம் கொண்டவராகவும் மிகவும் பணிவாகவும் இருந்தார் எனவும் கூறியிருக்கும் சினோனோ, அவர் மூலம் பிரபலமான பலரையும் சந்திக்க முடிந்ததாவும் குறிப்பிட்டுள்ளார்.
சொந்த மகள்களையே சீரழித்த தந்தை; கொன்று விடுவதாக மிரட்டி 4 வருடமாக செக்ஸ் டார்ச்சர்!
