சீன ராணுவ தளபதிகளை மிரளவைத்த இந்திய ராணுவம்..!! துளியளவும் சமரசம் இல்லை என அதிரடி..!!

ஏற்கனவே இந்தியாவில் கோரிக்கையின்படி கல்வான் பள்ளத்தாக்கு உட்பட பல பகுதிகளிலிருந்து சீனர்கள் பின் வாங்கியுள்ளனர். இருப்பினும் சீனா இன்னும் பாங்கொங் த்சோவில் உள்ள விரல் 4 மற்றும் விரல் 8 பகுதிகளிலிருந்து விலகிச் செல்லவில்லை. 

Indian Army beats Chinese army commanders,  Action as there is no compromise

பிராந்திய இறையாண்மை விவகாரத்தில் இந்தியா உறுதியாக இருப்பதுடன், அதில் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளாது என சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்திய எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன் 15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய கொடூர தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.  பதற்றம் நீடித்து அதேநேரத்தில் மறுபுறம் நடைபெற்று வந்த இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து இருநாடுகளும் எல்லையில் இருந்த படைகளை பின்வாங்கி உள்ளன. இதனால் எல்லை பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. Indian Army beats Chinese army commanders,  Action as there is no compromise

அதில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின் வாங்கியுள்ளது, ஆனாலும் சர்ச்சைக்குரிய பகுதியான பாங்கொங் த்சோவில் உள்ள ஃபிங்கர்- 4 மற்றும் ஃபிங்கர்- 8 ஆகிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் இன்னும் பின் வாங்கப்படவில்லை. இந்நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒட்டியுள்ள மால்டோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு நாட்டு மூத்த ராணுவ தளபதிகள் மட்டத்திலான அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டம் 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அதில் கிழக்கு லடாக்கின் அனைத்து பகுதிகளிலும் இருநாடுகளுக்கிடையே அமைதியை உறுதி  செய்வதுடன்,  ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர்-8 ல் உள்ள படைகளை பின்வாங்க வேண்டும் என்றும் இந்திய தூதுக்குழு தெளிவாக எடுத்துறைத்தது.  எனவே சீன ராணுவம் விரைவில் பதற்றமான அனைத்து பகுதிகளில் இருந்தும் படைகளை விலக்க வேண்டும் என்றும் இந்திய தரப்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Indian Army beats Chinese army commanders,  Action as there is no compromise

ஏற்கனவே இந்தியாவில் கோரிக்கையின்படி கல்வான் பள்ளத்தாக்கு உட்பட பல பகுதிகளிலிருந்து சீனர்கள் பின் வாங்கியுள்ளனர். இருப்பினும் சீனா இன்னும் பாங்கொங் த்சோவில் உள்ள விரல் 4 மற்றும் விரல் 8 பகுதிகளிலிருந்து விலகிச் செல்லவில்லை. இது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அக் கூட்டத்தில் பேசப்பட்ட தகவல்கள் ராணுவ தலைவருக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்தை முழுமையாக திரும்பப் பெறுதல் மற்றும் ராணுவ கட்டுமானத்தை அகற்றுவதற்கான செயல்முறையை இறுதி செய்தல் போன்ற தகவல்கள் ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம் நரவானேவுக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எல்லையின் முன்புறத்தை கையாளும் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios