ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தை இந்தியா கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் ஆப்பு காத்திருக்கிறது.
India to take over Bagram Air Base: இந்தியா, பாகிஸ்தான் இடையே பெரும் மோதல் நடந்து முடிந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தான் விமானப்படை தளங்களை சின்னபின்னமாக்கியது. ஒரு நாடு போரில் வெற்றி பெற விமானப்படை தளம் மிகவும் முக்கியமானதாகும். இந்நிலையில், இந்தியா ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளம்
1950ம் ஆண்டு சோவியத் யூனியன் அரசு ஆப்கானிஸ்தானில் நட்பு நாடு என்ற முறையில் பக்ராம் விமானத் தளத்தை உருவாக்கியது. 1989ம் ஆண்டு இந்த ஏர்பேஸ் அமெரிக்கா வசம் சென்றது. பின்பு நீண்டகாலம் அதாவது 2021ம் ஆண்டு வரை இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பக்ராம் விமானத் தளம் அவர்களின் வசம் வந்தது.
பக்ராம் விமானத் தளம் இந்தியா வசமாகுமா?
இந்த நிலையில் தான் பக்ராம் விமானத் தளத்தை கைப்பற்ற இந்தியா தலிபான்களுடன் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே இந்த விமானத் தளத்தை கைப்பற்ற அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் போட்டி போட்டு வரும் நிலையில் இந்தியாவும் அந்த ரேஸில் குதித்துள்ளது. இந்தியாவிற்கு பக்ராம் ஏர்பேஸ் மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இந்தியா தஜிகிஸ்தானில் பர்கோர் மற்றும் அய்னி என்ற இரண்டு இடங்களில் விமானத் தளங்களை வைத்துள்ளது.
இந்தியாவுக்கு ஏன் பக்ராம் விமானத் தளம் முக்கியம்?
தஜிகிஸ்தானையும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தான் தான் பிரிக்கிறது. ஒருவேளை பக்ராம் விமானத் தளம் சீனாவின் பக்கம் சென்றால் பர்கோர் மற்றும் அய்னி விமானத் தளங்களுக்கு ஆபத்தாகி விடும். பக்ராம் விமானத் தளம் இந்தியா வசம் சென்றால் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலாகி விடும். அதாவது தஜிகிஸ்தானில் இருந்தும், ஆப்கானிஸ்தானில் இருந்தும் இந்தியா பாகிஸ்தானை தாக்க முடியும்.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியா
இதனால் தான் இந்தியா பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பறிய பிறகு அவர்களை இந்தியா மக்களாட்சியாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும் இந்தியா மீது நட்புறவை பேணும் ஆப்கானிஸ்தான் பஹல்காம் தாக்குதலை கண்டித்தது.
இதற்கிடையே கடந்த வாரம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆஃப்கானிஸ்தான் வெலியுறவு அமைச்சர் மவ்லவி அமீர் கான் முத்தாகியுடன் இரு தரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தொலைபேசியில் பேசினார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அந்த நாட்டு அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
