சர்வதேச அளவில் வளர்ச்சிப் பணிகளுக்காக தரப்படும்  நிதியை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு செலவு செய்து வருவதாகவும், எனவே அதை தடுக்க வலியுறுத்தி நாளை பாரீசில் நடைபெற உள்ள சர்வதேச நிதிய கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்தியா பேச திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. 

FATF எனும் சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பின் கூட்டம் ஆண்டுதோறும்  நடைபெறுவத் வழக்கம், அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கூட்டம், பாரீசில் நாளை முதல் வரும் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் சர்வதேச அளவில் நிதி பெறும் நாடுகள் அந்நிதியை முறையாக பயன்படுத்துகின்றனவா அதன் கணக்கு வழக்குகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில்  சர்வதேச அளவில் பெறப்படும் நிதியை பாகிஸ்தான் முறையாக பயன்படுத்துவதில்லை என்ற புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் கிரே பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பாகிஸ்தான் மீது இந்தமுறையும் புகார் எழும்பட்சத்தில் அது பிளாக் அவுட் பட்டியலுக்கு மாற்றப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், சர்வதேச அளவில் கிடைக்கும் நிதி முற்றிலுமாக நிறுத்தப்படும். 

எனவே பாகிஸ்தான், சர்வதேச அளவில் பெற்றுவரும் நிதியை கணிசமாக தீவிரவாதிகளுக்கு ஒதுக்கி வருவதை ஆதாரத்துடன்  நிரூபிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.  அதற்கான தகவல்களை திரட்டிவருவதுடன் நாளை பாரிஸில் நடைபெறவுள்ள  சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் கூட்டத்தில் அந்த ஆராதங்களை சமர்பித்து  முறையிட உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முறையிடும் போது  சீனா அதற்கு  தடையாக இருக்கக்கூடும் என்பதால் இன்று சீன அதிபர் ஜின்பிங் உடன் மோடி நடத்த உள்ள இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு கிடைக்கும் நிதி ஆதாரங்களை ஒடுக்குதல்,

  

போன்ற பிரச்சினைகளை  முன்வைத்து பேசுவதுடன்.  பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு காட்டிவரும் ஆதரவையும் சுடுகாட்ட உள்ளதாக தெரிகிறது. அத்துடன் வர்த்தகரீதியான இந்தியா-சீனா இடையேயான கருத்து வேறுபாடுகள். மற்றும் இரு நாட்டிற்கும் இடையே எல்லையில் நிலவும் சச்சரவுகள் குறித்தும் பேச உள்ளதாக தெரிகிறது. நாளை நடைபெறும்  பாகிஸ்தானுக்கு எதிராக கண்காணிப்பு  அமைப்பின் கூட்டத்தில் இந்தியா வைக்க உள்ள குற்றச்சாட்டு  பாகிஸ்தானுக்கு நிதி பெருவதில் நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தும் என நம்பலாம்.