எதிரி நாட்டு டாங்கிகளை தூள்தூளாக்க இந்தியா ஏவுகணை சோதனை..!! பீதியில் உறைந்த சீனா,பாகிஸ்தான்..!!

இந்த ஏவுகணைகளால் சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள எதிரிநாட்டு டாங்கிகளை குறிவைத்து தாக்கிஅழிக்க முடியும். இந்த வகையில் துருவஸ்ட்ரா வழிகாட்டப்பட்ட ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 

india launches missile test to destroy enemy tanks China, Pakistan frozen in panic

யுத்த காலத்தில் எதிரிநாட்டு டாங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய குறுகிய தூர ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக செய்து  முடித்துள்ளது.   துருவஸ்ட்ரா  என்ற ஹெலிகாப்டரில் பறந்தபடி எதிர் முகாமில் இருக்கும் டாங்கிகளை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலசோரில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 

 இந்திய-சீன எல்லையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த ஜூன்-15ஆம் தேதி இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இருநாடுகளும் படைகளை திரும்பப் பெற்றுள்ளன. இதனால் இரு நாட்டுக்கும் இடையிலான போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. 

india launches missile test to destroy enemy tanks China, Pakistan frozen in panic

அதே நேரத்தில் பாகிஸ்தான் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி வருகிறது, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட தீவிரவாத குழுக்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்று வருகின்றன. அவர்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான், சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு நேபாளமும் இந்தியாவை எதிர்க்க தொடங்கியுள்ளது. இந்திய எல்லையில் சீனா, பாகிஸ்தான், நேபாளம்  ஆகிய நாடுகளுடன் மோதல் நீடித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரஃபேல் போர் விமானம் உள்ளிட்ட அதிநவீன போர் தளவாடங்களை வெளிநாடிகளில் இருந்து இந்தியா வேகவேகமாக கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் எதிரி நாடுகளுடன் போர் ஏற்படும் பட்சத்தில், அதை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா எல்லா வகையிலும் தயாராகிவருகிறது. அதன் ஒரு பகுதியாக எதிரிநாட்டு டாங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையை இந்தியா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ளது. 

india launches missile test to destroy enemy tanks China, Pakistan frozen in panic

கடந்த ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய ராணுவம் துருவஸ்ட்ரா என்ற ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.  ஹெலிகாப்டரில் இருந்தபடி இலக்கை தாக்குவதே இந்த ஏவுகணையின் திட்டம்.  ஆனால், அதற்கு மாற்றாக தரையில் வைத்தே இந்த சோதனை நடத்தப்பட்டது, அப்போது ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணைகளால் சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள எதிரிநாட்டு டாங்கிகளை குறிவைத்து தாக்கிஅழிக்க முடியும். இந்த வகையில் துருவஸ்ட்ரா வழிகாட்டப்பட்ட ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. துருவஸ்ட்ரா என்பது ஏற்கனவே ராணுவ கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள ஏவுகணை பிரிவாகும். அதன் மேம்படுத்தப்பட்ட பகுதியே தற்போது சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு  3rd ஜெனரேஷன் டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை தார் பாலைவனத்தில் சோதிக்கப்பட்டது. முன்னதாக 12 நாட்களுக்கு மேலாக ஏவுகணையின் தரம் மற்றும் அனைத்து வகையான சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஏவுகணையை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகளையும் அதைப் பரிசோதித்த ராணுவ குழுவினரையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி புகழ்ந்துள்ளார்.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios