கடத்தப்பட்டுள்ள "கேலக்ஸி லீடர்" என்ற கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 பணியாளர்கள் உள்ளனர். ஆனால், இந்தியர்கள் யாராவது இருக்கிறாரா என்று தெரியவில்லை.
துருக்கியில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று ஏமனின் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்டுள்ள "கேலக்ஸி லீடர்" என்ற கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 பணியாளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர்களில் இந்தியர்கள் யாராவது உள்ளனரா என்பது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை.
இஸ்ரேலிய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் இந்தக் கடத்தலை உறுதிசெய்துள்ளது. "ஏமன் அருகே தெற்கு செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்குக் கப்பல் ஒன்றைக் கடத்திதியுள்ளனர். இது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் மிக மோசமான சம்பவம். இஸ்ரேலியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்தக் கப்பலில் பணிபுரிகின்றனர்" என்று கூறியிருக்கிறது.
ஒரு வருடம் வேறு ஒருவராக வாழ்ந்தால்... மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தாய்லாந்து அழகி சொன்ன நச் பதில்!
மேலும், கடத்தப்பட்டது துருக்கியில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பல் என்றும் இஸ்ரேலிய கப்பல் அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்தச் சரக்குக் கப்பல் ஜப்பானிய நிறுவனத்தால் இயக்கப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஈரானின் வழிகாட்டுதலுடன் ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கப்பல் கடத்தப்பட்டுள்ளது என்றும் இந்தக் கடத்தலை இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கிறது என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனது ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆதரவுடன் ஹவுதி கிளிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்களை குறிவைத்து கடத்தலில் ஈடுபடுதவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.
உச்ச நீதிமன்ற அனுமதியுடன் தமிழகம் முழுவதும் நடந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு
