Indians US Citizenship : அமெரிக்க குடியுரிமை.. புதிய சாதனை படைத்த இந்தியா - வெளியான அதிகாரப்பூர்வ ரிப்போர்ட்!

Indian's US Citizenship : கடந்த 2022ம் ஆண்டு அறிக்கையின்படி வெளிநாட்டில் பிறந்த 46 மில்லியன் பேர் அமெரிக்காவில் இப்பொது வசித்து வருகின்றனர். இதில் அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 333 மில்லியனில் சுமார் 14 சதவீதம் ஆகும்.

India become second largest source of new citizens in America says US census bureau ans

அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் அமெரிக்க சமூக கணக்கெடுப்பு தரவுகளின்படி சில அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி 65,960 இந்தியர்கள் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர். மெக்சிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் புதிய குடிமக்களுக்கான இரண்டாவது பெரிய ஆதார நாடாக இந்தியா மாறியுள்ளது.

2022 நிதியாண்டில் சுயாதீன காங்கிரஸின் ஆராய்ச்சி சேவையான ஏப்ரல் 15ன் சமீபத்திய “யுஎஸ் இயற்கைமயமாக்கல் கொள்கை” அறிக்கையில், 969,380 நபர்கள் அமெரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர். அதன்படி "மெக்ஸிகோவில் பிறந்தவர்கள் அதிக அளவில் அமெரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர். அதைத் தொடர்ந்து இந்தியா, பிலிப்பைன்ஸ், கியூபா மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவின் குடிமக்களாக மாறியுள்ளனர். 

சிறுவயதில் அச்சகத்தில் வேலை செய்த சிறுவன்.. பின்னாளில் அமெரிக்க டாலரில் இடம்பெற்ற கதை தெரியுமா?

சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், CRS 2022ல், 1,28,878 மெக்சிகன் குடிமக்கள் அமெரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் (65,960), பிலிப்பைன்ஸ் (53,413), கியூபா (46,913), டொமினிகன் குடியரசு (34,525), வியட்நாம் (33,246) மற்றும் சீனா (27,038) என்ற அளவில் அமேரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர்.

CRSன் தகவலின்படி 2023ம் ஆண்டின் நிலவரப்படி, 2,831,330 வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க குடிமக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இது மெக்ஸிகோவின் 10,638,429 என்ற அளவிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது.மெக்சிகோ மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக 2,225,447 என்ற மக்கள் தொகையுடன் சீனா 3ம் இடத்தில் உள்ளது.

இருப்பினும், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்களில் 42 சதவீதம் பேர் தற்போது அமெரிக்க குடியுரிமை பெற தகுதியற்றவர்கள் என CRS அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிரீன் கார்டு அல்லது சட்டப்பூர்வ நிரந்தர வதிவிடத்தில் (LPR) உள்ள இந்தியாவில் பிறந்த 2,90,000 வெளிநாட்டினர் குடியுரிமை பெற தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.

அதே போல அமெரிக்காவில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, ஜமைக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைந்த சதவீதத்தில் தான் உள்ளனர். இந்தியர்களை பொறுத்தவரை அதிக அளவில் அவர்கள் அமெரிக்கா செல்ல விரும்புவது கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வருகின்றது.

இலங்கை ராணுவ கார் ரேஸ்: பார்வையாளர்கள் மீது கார் பாய்ந்து 7 பேர் உயிரிழப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios