நான் சீனாவின் தீவிர ரசிகன்! சீனப் பிரதமரைச் சந்தித்த பின் எலான் மஸ்க் ஓபன் டாக்!
"நான் சீனாவின் தீவிர ரசிகன் என்பதைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். அதேபோல எனக்கும் சீனாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். பரஸ்பரம் ஒரே மாதியான உணர்வுகள் உள்ளன" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சீனா சென்றுள்ள டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் தான் சீனாவின் தீவிர ரசிகன் என்று பெருமையாகச் சொல்லி இருக்கிறார். இந்தியப் பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டு சீனா சென்ற நிலையில், அவர் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தீடீர் சீனப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுப் பிரதமருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
எலான் மஸ்க் ஞாயிற்றுக்கிழமை சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்தார். அங்கு அவர் டெஸ்லாவின் தானியங்கி எலெக்ட்ரிக் கார் மென்பொருள் வெளியீடு குறித்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எல்லா மொபைல் போனிலும் இந்தச் சின்ன துளை இருப்பது ஏன் தெரியுமா?
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், "சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். ஆரம்ப காலத்திலிருந்தே நாங்கள் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
"நான் சீனாவின் தீவிர ரசிகன் என்பதைக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். அதேபோல எனக்கும் சீனாவில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். பரஸ்பரம் ஒரே மாதியான உணர்வுகள் உள்ளன" என எலான் மஸ்க் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டில், டெஸ்லா முதல் முறையாக அமெரிக்காவிற்கு வெளியே ஷாங்காயில் கார் உற்பத்தி ஆலையை நிறுவ சீன அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்தது. அங்கு உருவான ஆலையில் இருந்து வெளிநாடுகளுக்கும் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
டெஸ்லா தொடங்கியதில் இருந்து 1.7 மில்லியனுக்கும் அதிகமான கார்களை சீனாவில் விற்பனை செய்துள்ளது. மேலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவிற்கு டெஸ்லா கார்கள் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகின்றன.
இந்தியப் பயணத்தை ரத்து செய்த எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம்!