Asianet News TamilAsianet News Tamil

இந்திய நிறுவனம் தயாரித்த மருந்தில் விஷ பாக்டீரியா: WHO எச்சரிக்கை

லெபனான், ஏமன் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்திய நிறுவனம் தயாரித்த மருந்தில் கலப்படம் இருப்பதாகவும் உலக சுகாதர நிறுவனம் எச்சரித்துள்ளது.

Hyderabad company's cancer medicine found contaminated in Yemen, Lebanon: WHO
Author
First Published Mar 28, 2023, 6:13 PM IST

இந்திய மருத்து நிறுவனம் தயாரித்த மருந்துகளில் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியா, சூடோமோனாஸ் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உலக சுகாதர நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறைக்கு உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் எச்சரிக்கை கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த செலோன் லேப்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மெத்தோட்ரெக்ஸேட், கீமோதெரபி  ஊசி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருந்து உட்பட நான்கு மருந்துகள் தரமற்றவையாகவும் அசுத்தமாகவும் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

தரமற்ற, போலியான மருந்துகளைத் தயாரித்த 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து!

குறிப்பாக, செலோன் லேப்ஸ் நிறுவனத்தின் மெத்தோட்ரெஸ் (Methotrex 50mg) ஊசி குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்தார். மேற்கு ஆசிய நாடுகளான ஏமன் மற்றும் லெபனானில் இருந்து இந்தப் புகார் எழுந்துள்ளது.

Hyderabad company's cancer medicine found contaminated in Yemen, Lebanon: WHO

இந்த நாடுகளில் உள்ள சுகாதார அதிகாரிகள், இந்த ஊசியினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கவனித்துள்ளனர். இதனால் அவர்கள் முன்னெடுத்த ஆய்வின் முடிவில் இந்த ஊசி மருந்து மாசுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர். "இந்த ஊசி எடுத்துக்கொள்ளும் நோயாளிகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் அவர்கள் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயம் அதிகம்" என்று WHO அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தபால் துறையின் சூப்பர்ஹிட் திட்டம்! 12 ஆயிரம் டெபாசிட் செய்தால் ஒரு கோடியாக மாறும்!

இந்தத் தரமற்ற மருந்துப் பொருட்கள் கள்ளச்சந்தை வாயிலாக ஏமன் மற்றும் லெபனான் நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதவதாகவும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. MTI2101BAQ என்ற மருந்து இந்தியாவில் மட்டுமே விற்கப்பட வேண்டும். ஆனால், இவ்விரு நாடுகளும் ஒழுங்குபடுத்தப்பட்ட மருந்து விநியோகச் சங்கிலிக்கு வெளியிலிருந்து இந்த மருந்துகளைக் கொள்முதல் செய்துள்ளன எனவும் சொல்லப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்த அனுமதிக்கப்படாத தயாரிப்புகளுக்கான பாதுகாப்பிற்கு உற்பத்தியாளரால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று WHO தெரிவித்துள்ளது. ஏமன், லெபனான் போல வேறு நாடுகளுக்கும் இந்த மருந்துகள் கள்ளச் சந்தையில் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. நோயாளிகளுக்கு தீய விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்க, அசுத்தமான மருந்துகளை கண்டறிந்து புழக்கத்தில் இருந்து அகற்றுவது முக்கியம் எனவும் வலியுறுத்தியிருக்கிறது.

கோவை இளைஞருக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டு கடுங்காவல் சிறை

Follow Us:
Download App:
  • android
  • ios