Asianet News TamilAsianet News Tamil

சிக்கப்பூரில் வீசப்போகும் புழுதிப் புயல்! தயார் நிலையில் இருக்கும் அரசு - மக்களுக்கும் எச்சரிக்கை!

எல் நினோ விளைவால் சிங்கப்பூரில் புகைமூட்டம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என வானிலை மையம் தெரவித்துள்ளது. இதுதொடர்பான பாதிப்புகளை எதிர்கொள்ள மருத்துவமனைகள் தயாராகி வருகின்றன என சுகாதாரத்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.
 

Hospitals gearing up to deal with smog-related impacts: Minister Grace Fu
Author
First Published Jul 7, 2023, 11:38 AM IST

தென்கிழக்காசிய நாடுகள் வட்டாரத்தில் தற்போது நிலவும் வறண்ட காலநிலை நிலவுகிறது. 2019ம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெப்பமான, வறட்சியான பருவநிலை இப்போது காணப்படுகிறது.

எல் நினோ பருவநிலை மாற்றத்தால், அடுத்த சில மாதங்களுக்குத் வெப்பமான, வறண்ட வானிலை ஏற்படக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘பாசிட்டிவ் இண்டியன் ஓஷியன் டைபோல்’ எற்ற நிகழ்வால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் கடலின் மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு நிகழ்வுகளால் சிங்கப்பூரிலும் காட்டுத் தீச்சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்றும், அதனால் எல்லை கடந்த புகைமூட்டப் பிரச்சினை ஏற்படும் அபாதாக சுகாதாரத்துறை அமைச்சர் கிரேஷ் ஃபூ தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் தற்போது வறண்ட பருவநிலை நிலவி வருவதால், புழுதிப்புயல் ஏற்பட்டு புகைமூட்ட பாதிபு ஏற்படும் அபாயம் உள்ளது. இதலாம், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஏற்பட்டால் அதனை கையாள இங்குள்ள மருத்துவமனைகளும் தயாராகி வருகின்றன.

செய்தித்தாள் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டிய SHP Media trust? அரசு நிதி ஒதுக்கப்படும் என எச்சரிக்கை!

மேலும், புகை மூட்டத்தால் ஏற்படும் சுவாச பாதிப்புகளை தடுக்கும் வகையில், போதிய எண்ணிக்கையில் N95 ரக முகக்கவசங்கள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதியோர்களுக்காக குடியிருப்பாளர் குழு நிலையங்களையும் பொதுமன்றங்களில் உள்ள பெரிய அறைகளை திறந்து விடுவது குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக அமைச்சர் கிரேஷ் ஃபூ தெரிவித்தார். புகை மூட்டம் மோசமானால் முதியவர்களை, பாதுகாக்கப்பட்ட இடங்களில் தங்கவைக்க முடியும் என்றார்.

போதிய எண்ணிக்கையில் N95 ரக முகக்கவசங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், தேவைப்படும்போது சில்லறை விற்பனை மருந்துக்கடைகளுக்கு அவை விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாள அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். எல்லா பள்ளிகளிலும் வகுப்பறைகளில் காற்றைத் தூய்மையாக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. முதியோர் இல்லங்களிலும் போதிய எண்ணிக்கையில் காற்றைத் தூய்மைப்படுத்தும் கருவிகளும் மருந்துப் பொருள்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரே ஆண்டில் 30.8 பில்லியன் இழப்பு; டாலர் மதிப்பு உயர்ந்தும் நஷ்டம் அடைந்த சிங்கப்பூர்!

மேலும், புகைமூட்டம் ஏற்பட்டால் வெளி வேலைக்கு செல்வோர் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீட்டைத் தெரிந்துகொள்வது நல்லது என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios