அதிக வேலை.. 600 ரூ தான் சம்பளம்.. கொடுமையில் பணியாளர்கள் - Hinduja குடும்ப நபர்களுக்கு சிறை! ஸ்விஸ் அதிரடி!
Hinduja Family : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், தங்கள் வீட்டில் பணி செய்த வீட்டுப் பணியாளர்களை சித்திரவதை செய்து, அவருக்கு ஒழுங்காக சம்பளம் வழங்காமல் இருந்த குற்றத்திற்காக, சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அவர்களுக்கான தீர்ப்பை அளித்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹிந்துஜா குடும்பத்தினர், தங்கள் உதவியாளர்களை கடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அவ்வாறு கடத்தப்பட்டவர்களில், பெரும்பாலானோர் படிப்பறிவற்ற இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.
அன்று ஹோட்டலில் வெயிட்டர்.. இன்று அம்பானி, டாடாவை விட பெரிய பணக்காரர்.. யார் தெரியுமா?
ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஜெனீவாவில் உள்ள ஒரு ஆடம்பர ஏரிக்கரையோர சொகுசு பங்களாவில், சில உதவியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். மேலும் அவர்களை கொடூரமாக நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின், நீதிமன்ற விசாரணையின் போது அந்த நான்கு குடும்ப உறுப்பினர்கள் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இன்று அவர்கள் ஆஜரான நிலையில், ஆட்கடத்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, பிற குற்றங்களுக்காக அவர்கள் நால்வருக்கும் 4.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த அந்த 4 பேர், தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டை பதுக்கிவைத்ததாவும் வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் தங்களிடம் பணிபுரிந்தவர்களுக்கு, சுவிஸ் நாட்டு பணத்தில் சம்பளம் வழங்காமல், இந்திய ரூபாய்களில் சம்பளம் வழங்கியுள்ளனர். அதுவும் அதிக நேர கடுமையான வேலைக்கு, 600 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த தொழிலாளர்கள் அந்த ஆடமபர பங்களாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த கிரிமினல் வழக்கு கடந்த வாரம் தான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஊழியர்களை சுரண்டுதல், மனித கடத்தல் மற்றும் சுவிஸ் தொழிலாளர் சட்டங்களை மீறியதாக பல வழக்குகள் ஜெனிவா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்துஜா குடும்பம் பல தசாப்தங்களாக சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.