டிரம்புக்கு எதிராக பேசிய இந்து சாமியாரை ரவுண்டு கட்டிய அமெரிக்கர்கள்..!
அமெரிக்காவில் இந்து சாமியார் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் இந்து சாமியார் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற கொள்கையில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருக்கும் டிரம்ப், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மீது எதிர்மறையான கருத்துக்களை கொண்டுள்ளார். இதன் காரணமாக அவ்வப்போது இனரீதியிலான கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி கொள்கிறார்.
‘ஜனநாயக கட்சியை (எதிர்க்கட்சி) சேர்ந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பி செல்ல வேண்டும்,’ என டிரம்ப் சமீபத்தில் டிவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது. இதை கண்டித்து நாடாளுமன்றத்தில் அவர் மீது கொண்டு வரப்பட்ட தீர்மானமும் வெற்றி பெற்றது.
இதனிடையே, நியூயார்க்கின் புளோரல் பார்க் பகுதியில் இந்து சாமியார் சுவாமி ஹாரிஸ் சந்தர் புரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த தாக்குதலில் சாமியாரின் உடல், முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது டிரம்பின் அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் குறித்த சமீபத்திய அவரது பேச்சும், அவர்கள் மீதான கடும் நடவடிக்கையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், சசிதரூர் அவரது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.