H-1B விசா புதுப்பித்தலை அமெரிக்காவிலேயே மேற்கொள்ளலாம்! - பிரதமர் மோடி அறிவிப்பு!
அமெரிக்காவின், வாஷிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் கட்டிடத்தில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் அமெரிக்க புதிய தூதரகங்கள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர், அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றினார்.
2022 நிதியாண்டில் கிட்டத்தட்ட 4,42,000 H-1B தொழிலாளர்கள், கிட்டத்தட்ட 73 சதவிகித இந்தியர்கள், அமெரிக்க H-1B விசா மூலம் இந்திய குடிமகன்களாக இருந்து அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர்.
புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகின் மிகப்பெரிய அமெரிக்க தூதரகங்களில் ஒன்றாகும். மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு தூதரகங்களின் செயல்பாடுகளை தூதரகம் ஒருங்கிணைக்கிறது, அதன் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, அமெரிக்கா-இந்திய உறவு நாடு முழுவதும் வலுவாக இருப்பதை உறுதி செய்கிறது.
உங்கள் பங்களிப்பு அளப்பரியது... சியர்ஸ்: கமலா ஹாரிஸுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இந்தியா-அமெரிக்க உறவுகளின் புதிய மற்றும் புகழ்பெற்ற பயணம் தொடங்கியுள்ளது என்றும், இரு பெரும் ஜனநாயக நாடுகளும் தங்கள் பிணைப்பை வலுப்படுத்துவதை உலகமே கவனித்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் அதிகளவில் பணியாற்றி வரும் இந்தியர்களின் நலனுக்காக, H-1B விசா வைத்திருப்பவர்கள் இனி அமெரிக்காவிலேயே புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். மேலும், பெங்களூரு மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க புதிய தூதரகங்கள் திறக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவிற்கு வரும் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. Google நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு
பிரதமர் மோடியின் சைவ விருந்தில் இடம்பெற்ற ‘படேல் ரெட் பிளெண்ட் 2019’ ஒயின் - ஏன், எதற்கு தெரியுமா?