இந்தியாவிற்கு வரும் கூகுளின் உலகளாவிய ஃபின்டெக் மையம்.. Google நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு
குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தை கூகுள் திறக்க உள்ளதாக பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் நரேந்திர மோடியை வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, குஜராத்தில் கூகுள் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் என்று அவர் அறிவித்தார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை குஜராத்தில் அதன் உலகளாவிய ஃபின்டெக் செயல்பாட்டு மையத்தைத் திறக்கும் என்று அறிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, “அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தின் GIFT நகரில் எங்களின் உலகளாவிய fintech செயல்பாட்டு மையத்தை திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம்." என்று சுந்தர் பிச்சை கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார். இது மற்ற நாடுகள் பின்பற்ற விரும்பும் திட்டம் என்றும் கூறினார். “டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு அவரது காலத்திற்கு முன்னதாகவே இருந்தது” என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் சைவ விருந்தில் இடம்பெற்ற ‘படேல் ரெட் பிளெண்ட் 2019’ ஒயின் - ஏன், எதற்கு தெரியுமா?