நேபாளத்தில் அடுத்தடுத்து வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு... 43 பேர் உயிரிழந்த பரிதாபம்...!
நேபாளத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஒருபுறம் என்றால், மறுபுறம் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்து உள்ளனர். மேலும், 24 பேரை காணவில்லை என அந்நாட்டுக் அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இன்னும் வரும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 10 செ.மீ. மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.