வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்‍கில் சிக்‍கி 15 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 5-க்‍கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்புக்‍குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வியட்நாமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய Sarika புயலைத் தொடர்ந்து, மத்திய மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்‍கால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்‍காடாய் காட்சியளிக்கிறது.

வெள்ளத்தில் சிக்‍கி இதுவரை 15 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 5-க்‍கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்‍குள் தண்ணீர் புகுந்துள்ளதால், வெள்ளத்தில் சிக்‍கியவர்களை படகுகள் மூலம் மீட்புக்‍குழுவினர் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்‍கு வெளியேற்றி வருகின்றனர்.