பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் அக்டோபர் 7 ஆம் தேதி நடத்திய தாக்குதலின் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேலிய ராணுவ தளத்தை தாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. கிசுஃபிம் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கான் யூனிஸின் கிழக்கே ராணுவ முகாமில் இருந்த இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது பிணைக் கைதிகளாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான 'அல் அக்ஸா ஃபிளட்' என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் வீடியோவில் பதிவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி இருந்தனர். ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைககளைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தற்போது போராக மாறியுள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இவர்களை விடுவிக்க இஸ்ரேல் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 60 பேர் மீட்கப்பட்ட நிலையில், 25 பேர் ஹமாஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தற்போது ஹமாஸின் உச்சபட்ச கமாண்டோவான நுக்பா படையின் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் இதுவரை ஹமாஸ் தீவிரவாதிகளின் இடத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 4000 டன் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
