அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதக் குழு இஸ்ரேலில் அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய கொடூரமான தாக்குதலின்போது சுமார் 200 பேரை பணயக்கைதிகளாகக் கடத்திச் சென்றது. வெள்ளிக்கிழமை அவர்களில் இரண்டு பேரை விடுவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பலர் விடுவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விடுவிக்கப்பட்ட ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

"கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, மனிதாபிமான அடிப்படையில் இரண்டு அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்று ஹமாஸ் கூறியுள்ளது. ஜூடித் டாய் ரானனின் உடல் நிலை காரணமாக தாயும் மகளும் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர்களின் உடல் நிலை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

சிங்கப்பூரில் இரண்டாம் நாள்.. முக்கிய அமைச்சர்களை சந்தித்த இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் - முழு விவரம்!

வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் இஸ்ரேல் திரும்பியதை இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தியது. தொடர்ந்து பணய கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறுகையில், "மனிதநேய அடிப்படையில் பணய கைதிகளை விடுதலை செய்வதாக ஹமாஸ் வெளி உலகிற்குக்க் காட்டிகொள்கிறது. உண்மையில், நாங்கள் ஒரு கொலைகார கும்பலுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். பச்சிளம் குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியவர்களை சிறை பிடித்து வைத்திருக்கிறார்கள்" எனச் சாடியுள்ளார்.

Scroll to load tweet…

இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

பணயக் கைதிகள் பலரைப் போலவே ரானன் குடும்பமும், அவர்களை விடுவிப்பதற்காக வேண்டுகோள் விடுத்திருந்தது. இருவரும் விடுவிக்கப்பட்ட செய்தியில் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக நடாலியின் சகோதரர் பென் ரானன் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "எனது சகோதரிக்காக பிரார்த்தனை செய்த உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் நன்றி" எனவும் தெரிவித்துள்ளார்.

ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு: 5 வினாடிக்கு முன் தானாகவே நின்றுபோன கவுன்ட்டவுன்