சர்வதேச மண் காப்போம் கொள்கை கையேடு அறிமுகம்! வட்டமேசை மாநாட்டில் சர்வதேச நிபுணர்கள் சத்குருவுடன் ஆலோசனை
மண் காப்போம் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட வட்டமேசை விவாதத்தில், மண் வளத்தை காப்பாற்றுவதற்கான முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய ஒத்திசைவான மொழியைக் கொண்டு வருமாறு சர்வதேச மண் வள நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளை சத்குரு வலியுறுத்தினார்.
உலக மண் தினத்தை முன்னிட்டு நடந்த சர்வதேச வட்டமேசை மாநாட்டில் சத்குரு மற்றும் சர்வதேச அளவிலான மண் நிபுணர்கள், விஞ்ஞானிகள், உலகளவில் 7 மண்டலங்களுக்கான Global Save Soil Policy Handbook-ஐ அறிமுகம் செய்தனர். ஆசியா, ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் மண் வளத்தை காப்பதற்கான கையேடு இது. 193 நாடுகளில் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான 700 தனித்துவமான வழிகளைப் பரிந்துரைக்கும் நிலையான மண் மேலாண்மை நடைமுறைகளும் வெளியிடப்பட்டன.
இந்த வட்டமேசை மாநாட்டில் 31 நாடுகளை சேர்ந்த 155 நிபுணர்கள் கலந்துகொண்டு, மண் காப்போம் இயக்கத்தின் இலக்குகளை அடைவது குறித்து சத்குருவுடன் ஆலோசித்தனர்.
இந்த வட்டமேசை மாநாட்டில் மண் வளத்தை காப்பாற்றுவதற்கான முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய ஒத்திசைவான மொழியைக் கொண்டு வருமாறு விஞ்ஞானிகளையும் நிபுணர்களையும் சத்குரு வலியுறுத்தினார்.
மேலும் மண் வளத்தை காப்பதன் அவசியம் குறித்து பேசிய சத்குரு, உலகளவில் மண் வளத்தை காப்பதன் அவசியத்தை மக்கள் உணராத வரை, அரசாங்கங்கள் இந்த விஷயத்தை துரிதமாக கவனம் செலுத்தாது. வாக்கு அரசியலை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக மண் வளம் உருவெடுக்காத வரை, இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது என்றார்.
வட்டமேசை மாநாட்டில், மண் காப்போம் இயக்கத்தின் முக்கியமான 2 நோக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மண்ணின் கரிமப் பொருளை அதிகரிப்பதன் மூலம் மண்ணின் ஆரோக்கியத்தை உயர்த்துவதற்கான சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற முதல் நோக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜி20 குளோபல் முன்னெடுப்பின் இயக்குநர் டாக்டர். முரளி தும்மருகுடி பேசும்போது, ஐரோப்பிய யூனியன் மண் உத்தி சட்டம், மண் வளம் தொடர்பான கல்வி அவசியத்தை வலியுறுத்துகிறது. மக்கள் மண் வளத்தின் முக்கியத்துவம் பற்றி கண்டிப்பாக தெரிந்துகொள்ள மண் வள கல்வி உதவும். அந்த மாபெரும் பணியைத்தான் சத்குருவும், மண் காப்போம் இயக்கமும் செய்துவருகிறது என்று புகழாரம் சூட்டினார்.
இந்த வட்டமேசை மாநாட்டில் விவாதிக்கப்பட்ட 2வது நோக்கம், மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு உதவுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய டாக்டர் பால் லூ, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட, பாலைவனமாக்குதலை எதிர்த்து, உயிரியல் பன்முகத்தன்மை அரிப்பை எதிர்த்துப் போராட, உணவுப் பாதுகாப்பைப் பெற விரும்பினால், ஆரோக்கியமான மற்றும் வளமான மண் தான் அனைத்து செயல்களுக்கும் அடிப்படை என்றார்.
Global Save Soil Policy Handbook-ஐ டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
மண் காப்போம் இயக்கத்தை பற்றிய விரிவான விவரங்களை அறிய -
இன்னும் விரிவான இதுகுறித்து தெரிந்துகொள்ள +91 94874 75346 என்ற எண்ணுக்கு தொடர்புகொளவும் அல்லது mediarelations@ishafoundation.org என்ற தளத்தில் எழுதவும்.