எலான் மஸ்க் முதல் மார்க் ஸக்கர்பர்க் வரை : உலகின் டாப் 10 பெரும்பணக்காரர்கள் பட்டியல் இதோ..
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கோடீஸ்வரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
உலகின் பெரும் பணக்காரர் பட்டியல் போர்ப்ஸ் இதழால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த தரவரிசையின் முதல் பதிப்பு 1987 இல் வெளியிடப்பட்டது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் டாப் 10 இடங்களை யார் யார் பிடித்துள்ளனர் என்று தெரியுமா? உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கோடீஸ்வரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
எலான் மஸ்க்
உலகின் பெரும்பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எலான் மஸ். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா (எலக்ட்ரிக் கார் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் $44 பில்லியனுக்கு வாங்கினார். பின்னர் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த அவர் சமீபத்தில் ட்விட்டரின் பெயரை X என்று மாற்றினார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 269.8 பில்லியன் டாலராகும்.
பெர்னார்ட் அர்னால்ட் :
பெர்னார்ட் அர்னால்ட் உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான "Moet Hennessy Louis Vuitton (LVMH)" ன் CEO ஆவார், இந்த நிறுவனம் சுமார் 70 புகழ்பெற்ற ஃபேஷன் மற்றும் அழகுசாதனப் பிராண்டுகளை உள்ளடக்கியது. அர்னால்ட்டின் மொத்த சொத்து மதிப்பு 200.7 பில்லியனர் டாலராகும்
ஜெஃப் பெசோஸ்
அமேசான் நிறுவனர், ஜெஃப் பெசோஸ், 163.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். அவர் சமீபத்தில் சரிவை சந்தித்தாலும், அவரின் ஆண்டு வருமான $57.7 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது.
லாரி எலிசன்
உலக பெரும் பணக்காரர் பட்டியலில் லாரி எலிசன் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிளின் 35% உரிமையாளரான இவர், அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி, தலைவர் மற்றும் இணை நிறுவனர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 145.6 பில்லியன் டாலராகும்.
வாரன் பஃபே
வரலாற்றின் மிகச் சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபே Berkshire Hathaway இன் தலைவராக உள்ளார். Geico, Duracell மற்றும் டெய்ரி குயின் போன்ற பல நிறுவனங்களை உள்ளடக்கிய பல்வேறு போர்ட்ஃபோலியோவைக் கொண்ட முதலீட்டு நிறுவனமாகும். உலக பெரும் பணக்காரர் பட்டியலில் இவர் 5-வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 123.1 பில்லியன் டாலராகும்.
லாரி பேஜ்
லாரன்ஸ் எட்வர்ட் பேஜ் ஒரு அமெரிக்க பில்லியனர் வணிக அதிபர். அவர் செர்ஜென் பிரின் உடன் இணைந்து கூகுள் நிறுவனத்தை நிறுவினார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 115.3 பில்லியன் டாலராகும்.
பில் கேட்ஸ்
பில்கேட்ஸ் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். அவர் 1975 இல் பால் ஆலனுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 111.5 பில்லியன் டாலராகும். பில் கேட்ஸ் அமெரிக்காவில் விவசாய நிலங்களின் மிகப்பெரிய உரிமையாளராக இருக்கிறார். மேலும் அவர் கனடாவின் தேசிய இரயில்வே மற்றும் ஆட்டோநேசன் போன்ற பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
செர்ஜி பிரின்
லாரி பேஜ் உடன் இணைந்து Google இன் இணை நிறுவனர் பிரின். 2019 வரை கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இன்க் தலைவராக இருந்தார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 110.6 பில்லியன் டாலராகும்.
மார்க் ஜுக்கர்பெர்க்
மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு அமெரிக்க பில்லியனர் வணிக அதிபர், கணினி புரோகிராமர், இணைய தொழில்முனைவோர் மற்றும் பரோபகாரர். அவர் சமூக ஊடக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்களை இணைந்து நிறுவினார், அதில் அவர் செயல் தலைவர், CEO மற்றும் கட்டுப்பாட்டு பங்குதாரராக உள்ளார்.
ஸ்ட்வ் பால்மர்:
ஸ்டீவ் பால்மர் பால்மர் ஒரு அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர் ஆவார், அவர் 2000 முதல் 2014 வரை மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். அவரின் மொத்த சொத்து மதிப்பு 100.5 பில்லியன் டாலராகும்.
- richest
- richest man in the world
- richest people
- richest people 2023
- richest people in history
- richest people in the world
- richest people in the world 2023
- richest person in the world
- top 10 richest
- top 10 richest man in the world
- top 10 richest people
- top 10 richest people in 2022
- top 10 richest people in the world
- top 10 richest people in the world 2022
- top 10 richest people in the world 2023
- top richest people in the world 2023
- world richest man 2023