Asianet News TamilAsianet News Tamil

"நாட்டின் அதிபருக்கே" தூக்கு தண்டனை..! தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை தான்..!

பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரப் தற்போது இவருக்கு வயது 76. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். 

Former Pakistan president Pervez Musharraf gets death penalty in high treason case and this is the hotest topic  in the world
Author
Pakistan, First Published Dec 17, 2019, 1:29 PM IST

"நாட்டின் அதிபருக்கே" தூக்கு தண்டனை..! தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை தான்..! 

பாக் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்-கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை  விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது 

பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரப் தற்போது இவருக்கு வயது 76. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்பு சட்டத்தை அவர் முடக்கிவைத்தார். இது பெரும் எதிர்ப்புக்கு வழி வகுத்தது.

இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறப்போவதாக கூறி முஷாரப் துபாய்க்கு சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பவே இல்லை. இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பை வரும் 28 ஆம் தேதி வெளியிடுவதாக அந்த நீதிமன்றம் அறிவித்தது.

Former Pakistan president Pervez Musharraf gets death penalty in high treason case and this is the hotest topic  in the world

இதனை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கின் தீர்ப்பை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தது. மேலும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் முஷாரப் தனது வாதங்களை பதிவு செய்யலாம் என அவகாசம் வழங்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 17 ஆம் தேதி தீர்ப்பை அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படியே இன்று தேசதுரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபுக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. மேலும் தவறு செய்வதால் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம் என்பதை நிரூபணம் செய்யும் விதமாக, ஒரு நாட்டின்  அதிபராக இருந்தவருக்கே தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆனால், தற்போது பர்வேஸ் முஷாரப்பின் உடல்நிலை சரியில்லாததால் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios