முஷாரப்புக்கு சாவுக்கு மேல பெரிய தண்டனை... தீர்ப்பில் வெறித்தனம் காட்டிய நீதிபதிகள்..!

ஒருவேளை தூக்கிலிடப்படும் முன்பே அவர் இறந்துவிட்டால், அவரது உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சவுக் பகுதிக்கு இழுத்துவந்து 3 நாட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தொங்கவிட வேண்டும் என தீர்ப்பில் ஆவேசமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Former leader Pervez Musharraf sentenced to death...three judges verdict

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முன்னாள் அதிபர் முஷாரப் இறந்துவிட்டால், அவரது உடலை இழுத்துவந்து சென்டிரல் சதுக்கத்தில் 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முஷாரப் 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் அதிபரானார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ம் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது. 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷாரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெஷாவர் உயர் நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

Former leader Pervez Musharraf sentenced to death...three judges verdict

இந்த வழக்கை தலைமை நீதிபதி வாகர் அகமது சேத் தலைமையில் நீதிபதிகள் நாசர் அக்பர், கரீம் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த 167 பக்க தீர்ப்பில், முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு எப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் விவரித்துள்ளனர். அதில், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் அவர் குற்றவாளி என தெளிவாக உணர்ந்துள்ளோம். எனவே தண்டனை விதிக்கப்பட்ட அவரது கழுத்தில் தூக்கிட்டு இறக்கும் வரை தொங்கவிட வேண்டும். வெளிநாட்டு தப்பிச்சென்ற தண்டனை பெற்றவரை கைது செய்ய தங்களால் முடிந்த அளவு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறோம். அதோடு, சட்டப்படி அவரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

Former leader Pervez Musharraf sentenced to death...three judges verdict

ஒருவேளை தூக்கிலிடப்படும் முன்பே அவர் இறந்துவிட்டால், அவரது உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சவுக் பகுதிக்கு இழுத்துவந்து 3 நாட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தொங்கவிட வேண்டும் என தீர்ப்பில் ஆவேசமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Former leader Pervez Musharraf sentenced to death...three judges verdict

முன்னதாக இந்த தண்டனையை பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக விமர்சித்து இருக்கிறது. ராணுவத்தின் முன்னாள் தளபதி, பாகிஸ்தானின் அதிபர், போர்களில் பங்கேற்பு என 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக்காக உழைத்த முஷாரப் ஒருபோதும் துரோகியாக இருக்கமாட்டார் என ராணுவம் கூறியுள்ளது. இந்நிலையில், பிரதமர் இம்ரான்கான் உயர்மட்ட குழுவிற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முஷாரப் மேல்முறையீடு செய்வதற்கு அரசு துணை நிற்கும் என தெரிவித்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios