Bangaladesh | வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா விடுதலை! யார் இந்த கலிதாஜியா?
வங்கதேச சிறையில் உள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்வதாக அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டார். ஷேக் ஹசீனா ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக மாறியது.
கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற இப்போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர். அங்கு நிலைமை மிக மோசமானதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவி விலகியதோடு நாட்டை விட்டும் வெளியேறி டெல்லியை அடுத்த காசியாபாத்தில் தஞ்சமடைந்தார்.
கலீதா ஜியா விடுதலை
இந்நிலையில், வங்கதேச சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை விடுதலை செய்வதாக அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். பிரதமர் ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறியநிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது கவனத்துவம் பெருகிறது.
வங்கதேச அதிபர் ஷஹாபுதீன் மற்றும் அந்நாட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Explained | வங்கதேச கலவரம்! - தொடரும் மாணவர்கள் போராட்டம் - முழு பின்னணி!
யார் இந்த கலீதா ஜியா!
வங்கதேச நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்குத் தலைமை வகித்தவர் தான் கலீதா ஜியா. பிரதமராக இருந்தவரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனாவை தீவிரமாக கலீதா ஜியா எதிர்த்து வந்தார். இதனால், கடந்த 2018ம் ஆண்டு டாக்கா சிறையில் அடைக்கப்பட்டார். ஊழல் வழக்கு ஒன்றில் கலீதா ஜியாவுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவருக்கு 78 வயது ஆகியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கலீதாவை விடுவிக்க அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
கலீதா ஜியா 1991 முதல்1996 வரையிலும் 2001 முதல் 2006 வரையிலும் என இருமுறை வங்கதேச பிரதமராக இருந்தவர். மேலும், இவர் அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் பெற்றவர். கலீதா ஜியாவை தொடர்ந்து ஷேக் ஹசீனா 1996 வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாகப் பிரதமராக பதவியேற்றார். புது ஆட்சி அமைந்தவுடன் கலீதா ஜியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வங்கதேசம்? -தொடர்ந்து மாணவர்கள் போராட்டம்; பிரதமர் ஷேக் ஹசீனா தப்பி ஓட்டமா?
தற்போது ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், கலீதா ஜியாவை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் தற்போது ஆட்சியை பிடித்துள்ள ராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள், பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.