Greece King Constantine Died: கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் 2-ம் கான்ஸ்டென்டைன் காலமானார்

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரும், 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவரான முன்னாள் அரசர் 2-ம் கான்ஸ்டென்டைன்  உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. 

Former and last Greek monarch Constantine passes away at the age of 82.

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரும், 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவரான முன்னாள் அரசர் 2-ம் கான்ஸ்டென்டைன்  உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. 

ஏதென்ஸ் நகரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கான்ஸ்டென்டைன்  உயிரிழந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

கிரீஸ் வரலாற்றிலேயே 2-ம் கான்ஸ்டென்டைன்  ஆட்சி செய்த 9 ஆண்டுகள்தான் மிகவும் கொந்தளிப்பான அமைதியற்ற சூழலாக இருந்தது என்று வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா போன ஜெயிர் பொல்சனரோ மருத்துவமனையில் அனுமதி

கிரேக்க மன்னர் பால் மற்றும் ராணி ப்ரீடெரிகா ஆகியோருக்கு ஒரே மகனாக 2-ம் கான்ஸ்டென்டைன்  கடந்த 1940ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்தார். கடந்த 1964ம் ஆண்டு தனது தந்தை இறந்தபின் கிரீஸ் நாட்டு மன்னராக 2-ம் கான்ஸ்டென்டைன்  பதவி ஏற்றார். ஆனால், 2-ம் கான்ஸ்டென்டைன் ஆட்சியில் கிரீஸ்நாட்டில் அமைதியற்ற சூழல், கொந்தளிப்பு ஏற்பட்டதால், 1967ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி கிரீஸில் ராணுவப் புரட்சி ஏற்பட்டது.

Former and last Greek monarch Constantine passes away at the age of 82.

இதையடுத்து, கிரீஸ்நாட்டை ராணுவம் கைப்பற்றியதையடுத்து, 2-ம் கான்ஸ்டென்டைன்  நாட்டை விட்டு வெளியேறினார். கடந்த 1973ம் ஆண்டுவரை கிரீஸ் நாட்டில் ராணுவ ஆட்சி முடிந்து மக்களாட்சி நடைமுறைக்குவரும் வரை இத்தாலியின் ரோம் நகரிலேயே 2-ம் கான்ஸ்டென்டைன்  வசித்து வந்தார்.

கடந்த 1974ம் ஆண்டு கிரீஸில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தபின் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்கள் மீண்டும் மன்னர்ஆட்சி வருவதை விரும்பவில்லை. இதையடுத்து, கான்ஸ்டான்டினோஸ் கராமனிலியாஸ் தலைமையிலான அரசு 2-ம் கான்ஸ்டென்டைன் குடியுரிமையைப் பறித்தது.

துபாய் போனவருக்கு அடித்தது யோகம்! லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு!

கடந்த 1960களில் ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 2-ம் கான்ஸ்டென்டைன்  தலைமையிலான அணி படகுபோட்டியில் பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 

இதில் கிரீஸ் நாட்டில் உள்ள மன்னரின் சொத்துக்களுக்காக 1.370 கோடி யூரோக்களை இழப்பீடாக கான்ஸ்டென்டைன்  குடும்பத்தினர் பெற்றனர். இதில் ஏதென்ஸ் நகருக்கு வடக்கே இருக்கும் டாடோய் அரண்மனைத் தோட்டம் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.

எடின்பர்க் இளவரசர் பிலிப் பிறந்த கோர்பு நகரில் உள்ள அரண்மனை தற்போதுஅருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

2-ம் கான்ஸ்டென்டைன் , அவரின் மனைவி அன்னே மேரி ஆகியோருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கிரீஸ் நாட்டுக்கு இவர்கள் குடும்பத்தினர் வரும் முன் லண்டனில் வசித்துள்ளனர். 

ஏதென்ஸ் நகரில் கடந்த ஆண்டு கடைசியாக 2-ம் கான்ஸ்டென்டைன்  மக்களைச் சந்தித்தார். அப்போதே மிகவும் உடல்நலக்குறைவோடு செயற்கை சுவாசத்தின் உதவியோடு வாழ்ந்து வந்தார். வயது மூப்பு, இதயக்கோளாறு போன்றவற்றால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்ட 2-ம் கான்ஸ்டென்டைன்  நேற்று உயிரிழந்தார்.

Brazil Riots:பிரேசில் நாட்டில் என்ன குழப்பம் நடக்கிறது? ஏன் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்? விரிவான பார்வை

2-ம் கான்ஸ்டென்டைன்  க சகோதரி சோபியா, ஸ்பெயின் முன்னாள் மன்னர் ஜூவான் கார்லோஸின் மனைவியாவார். பிரிட்டனின் மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் கணவரும், எடின்பெர்க் டியூக் மன்னர் பிலிப், 2-ம் கான்ஸ்டென்டைனின் சித்தப்பா என்பதும் குறிப்பிடத்தக்கது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios