பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சனரோ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டின் முன்னாள் அதிர் ஜெயிர் பொன்சனரோவின் ஆதரவாளர்கள் அதிபர் மாளிகை உள்ளிட்ட இடங்களில் நுழைந்து அட்டாகம் செய்த நிலையில், திங்கட்கிழமை பொல்சனரோ திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அவரது மனைவி தெரிவித்திருக்கிறார். 2018ஆம் ஆண்டில் கத்தியால் குத்தப்பட்டதிலிருந்து அவருக்கு வயிற்றுப் பகுதியில் பிரச்சினை இருப்பதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

67 வயதாகும் பொல்சனரோ அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 31ஆம் தேதி நாட்டுவிட்டு வெளியேறி, அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். இப்போது புளோரிடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

துபாய் போனவருக்கு அடித்தது யோகம்! லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு!

பிரேசிலில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியா ஜெயிர் பொல்சனரோவைத் தோற்கடித்து அதிபராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 8ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, ஜெயிர் பொல்சனரோவின் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்சி நீதிமன்ற வளாகம் ஆகியவற்றில் அத்துமீறி நுழைந்து அவற்றைக் கைப்பற்றினார்கள். அந்நாட்டு அதிரடிப்படையினர் நீண்ட நேரம் போராடி அத்துமீறிய கும்பலை விரட்டியடித்தனர்.

உறைபனியில் நூடுல்ஸ் சாப்பிட முயன்றவருக்கு என்ன ஆச்சு பாருங்க!