Brazil Riots:பிரேசில் நாட்டில் என்ன குழப்பம் நடக்கிறது? ஏன் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்? விரிவான பார்வை
தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் மக்கள் போராட்டம், குழப்பம் போன்றவை உலக நாடுகளை உற்றுக் கவனிக்க வைத்துள்ளன.
தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் மக்கள் போராட்டம், குழப்பம் போன்றவை உலக நாடுகளை உற்றுக் கவனிக்க வைத்துள்ளன.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஐ.நா. தலைவர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் அங்கு நடக்கும் குழப்பத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆமாம் அப்படி பிரேசிலில் என்ன நடக்கிறது.
அதிபர் தேர்தல்
இந்தியாவின் ஜெனரிக் மருந்துகளுக்கு சீனாவில் கடும் கிராக்கி! போலிகள் குறித்து எச்சரிக்கை
பிரேசில் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த நாடாமன்றத் தேர்தலில் இடதுசாரியும், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, அதிபராக லூயிஸ் இனாகோ லூலா டா சில்வா பதவி ஏற்றார்.
ஆனால் முன்னாள் அதிபரும், வலதுசாரியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜெர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதில் குடியரசுக் கட்சியை ஒரு சதவீதவாக்கு வித்தியாசத்தில் தொழிலாளர் கட்சி வென்றது. அதாவது குடியரசுக் கட்சி 49.10 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், தொழிலாளர் கட்சி 50.90 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்ற பெற்றது.
தேர்தல் தோல்வி
ஆனால், வலதுசாரியான போல்சனாரோவின் ஆதரவாளர்கள் இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சி பெற்றி வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. முன்னாள் அதிபர் போல்சனாரோவும் அவ்வப்போது தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாகக் கூறி தொண்டர்களை உசுப்பேற்றி வந்தார்.
உலக கார் விற்பனையில் மூன்றாம் இடத்தில் இந்தியா... முதலிடத்தை பிடித்தது எந்த நாடு தெரியுமா?
கலவரம்
இதையடுத்து, ஆத்திரமடைந்த போல்சனாரோ ஆதரவாளர்கள், குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் நேற்று பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து சூறையாடி, தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமல்லாமல் தலைநகரில் உள்ள முக்கியமான அரசு கட்டிடங்களுக்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையில் திரண்டு வன்முறை வெறியாட்டம் ஆடி, அரசு கட்டிங்களை அடித்து நொறுக்கினர். அதிபர் மாளிகை, உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம் என எதையும்விட்டுவைக்காத குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சூறையாடினர். அதிபர் பதவியில் மீண்டும் போல்சனாரோவை அமர வைக்கவேண்டும்,அதிபர் டிசில்வாவை வெளியேற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
வலதுசாரிகள்
இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், கலவரக்காரர்களை ஒடுக்கவும் ராணுவத்தின் உதவியை அதிபர் டா சில்வா நாடினார். இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் நடந்த இடங்களில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்து கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். கலவரக்காரர்கள் வசம் இருந்த அதிபர் மாளிகை, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றை ராணுவம் மீட்டு போராட்டக்காரர்களை விரட்டினர், 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு
இந்த சம்பவம் குறித்து அதிபர் டா சில்வா கூறுகையில் “ இந்த கலவரம் தொடர்பாக நாடுமுழுவதும் தீவிரமான விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
ஆனால், பிரேசிலில் வலதுசாரிகள் நடத்திய வெறியாட்டம் என்பது அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் தோல்விக்குப்பின், அவரின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய வன்முறைக்கு ஒப்பாக இருந்தது. வலதுசாரிகள் தங்கள் அதிபர் பதவியிலிருந்து இறங்கியதை சகிக்க முடியாமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.
பிரேசிலில் நடந்த கலவரத்துக்கும், முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், கலவரம் நடந்தது என்பது போல்சனாரோ தூண்டுதலால் நடந்திருக்கலாம் என அதிபர் டா சில்வா குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை போல்சனாரோ மறுத்துள்ளார்.
பிரதமர் மோடி கண்டனம்
பிரேசிலில் நடந்த கலவரத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டகருத்தில் “ பிரேசிலில்உள்ள அரசு அமைப்புகளுக்கு எதிராக கலவரம் மற்றும் வன்முறைகள் நடந்த செய்திகள்கேட்டு ஆழ்ந்த கவலை அடைந்தேன். ஜனநாயக மரபுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும், எங்கள் ஆதரவை பிரேசில் அதிகாரிகளுக்குஅளிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பிடன் கண்டிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் “ பிரேசலில் ஜனநாயக்தின் மீது நடந்த தாக்குதலையும் அதிகாரத்தை மாற்ற முயல்வதையும் கண்டிக்கிறேன். பிரேசிலின் ஜனநாயக அமைப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் அவற்றுக்கு எங்கள் முழு ஆதரவு உண்டு.அதிபர் டா சில்வாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக இருக்கிறேன்”எ னத் தெரிவித்துள்ளார்.
- Brazil
- Brazil President
- Brazil Riots
- Brazil president Luna
- Brazil riots reason
- Jair Bolsonaro
- Luiz Inacio Lula da Silva
- Riots in Brazil
- World News
- bolsonaro brazil
- brazil congress
- brazil democracy
- brazil election
- brazil elections
- brazil latest news
- brazil news
- brazil news live
- brazil politics
- brazil presidential palace
- brazil protest
- brazil protests
- brazil riot
- brazil riots latest updates
- brazil riots news
- brazil supreme court
- brazil top news
- brazil violence
- breaking news
- far right brazil
- latest news
- news
- pm modi brazil riots
- riots
- what happened in brazil
- why are there riots in brazil