மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்வதாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும் நிரம்பி வழிகின்றன. இடுக்கி, வயநாடு, மலப்புரம் போன்ற மலைப்பாங்கான மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவால், எங்கு பார்த்தாலும் சேறும் சகதியுமாகவே காணப்படுகிறது. 

கொச்சி விமான நிலையத்தில் தேங்கியுள்ள வெள்ளம் வடியாததால், 26-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 370  பேர் உயிரிழந்துள்ளனர்.  கனமழை மற்றும் வெள்ளதால் கேரள மாநிலமே சின்னாபின்னமாகி கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என கேரளா அறிவித்தது.  பேரழிவை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டில் உள்ளவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக பிராத்தனை தெரிவிக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் எந்த வகையான உதவியையும் பாகிஸ்தான் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.