அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் Mike Pence பயணித்த விமானம், நியூயார்க் நகரில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிர் தப்பினர்.
வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில், துணை அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த Mike Pence போட்டியிடுகிறார். நேற்று Fort Dodge பகுதியில் உள்ள Lowa என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இவர் பங்கேற்ற பின்னர், தனது மனைவி மற்றும் மகளுடன் தனி விமானத்தில் நியூயார்க் நகருக்கு புறப்பட்டார். அவருடன் 37 அலுவலர்களும், 11 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர்.

நியூயார்க்கின் La-Guardia விமான நிலையத்தில் தரையிரங்கியபோது, எதிர்பாராத விதமாக விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. விமானி திறமையாக செயல்பட்டதால், விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.
இந்நிலையில், Ohiyo மாகாணம் Geneva என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட அதிபர் பதவிக்கான குடியரசு கட்சி வேட்பாளர் Donald Trump, விமான விபத்தில் சிக்கிய Mike Pence மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி உயிர்த் தப்பியதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, Manhattan-ல் உள்ள Trump Tower-ல் நடைபெற இருந்த நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சியை Mike Pence ரத்து செய்தார்.
