“போதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பிரதமர்.. நாங்கெல்லாம் அப்பவே அப்படி !” வைரல் வீடியோ !

பின்லாந்து நாட்டில் ஆட்சியில் உள்ள சோசியல் டெமாக்ரடிக் கட்சியின், பிரதமராக 34 வயதாகும் சன்னா மரீன் ( Sanna Marin) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆவார். 

Finland PM Sanna Marin dancing leaked video at party goes viral

உக்ரைன் ரஷ்யா போரை அடுத்து, மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான, 'நோட்டோ'வில் ஸ்விடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணையும் ஒப்பந்தத்திற்கு, மிக தீவிரமாக உழைத்து வருவதன் மூலம் தற்போது அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறார் பிரதமர் சன்னா மரீன்.

இந்த நிலையில் பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் அடுக்குமாடி குடியிருப்பில் தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்து போதையில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் வைரலாக பரவி வருகிறது. இது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த போது, அவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது.

மேலும் செய்திகளுக்கு..“அரசு டெண்டரில் முறைகேடு.. எடப்பாடிக்கு எதிரான ஆதாரங்கள் இருக்கு !” அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

மேலும் உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என்ற கண்டன குரல்களும் தொடர்ந்து வெளிவந்தது. இந்நிலையில் பிரதமர் சன்னா மரீன் போதையில் ஆட்டம் போட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளதை அடுத்து பிரதமர் பதவிக்கு சன்னா மரீன் அவமரியாதையும் களங்கத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக பின்லாந்து ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பொதுமக்களும் இதே கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த பார்ட்டியில் மதுவை தவிர வேறு போதை பொருட்களை பயன்படுத்தவில்லை எனவும், நடனமாடியது, பார்ட்டி செய்தது எல்லாம் சட்டப்படியான விஷயங்கள் என்றும் சன்னா மரீன் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், இவர் போதைமருந்து பரிசோதனை எடுக்க வேண்டும் என அந்நாட்டின் தலைவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர். 

Finland PM Sanna Marin dancing leaked video at party goes viral

இதுமட்டுமல்ல கடந்த கொரோனா (Covid 19) காலகட்டத்தில் இரவு வெளியே சென்று பார்ட்டியில் கலந்துகொண்டு சர்ச்சையை கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயத்தில் ஒரு நாட்டின் பிரதமர் என்றால் 24 மணி நேரமும் பணி செய்து கொண்டிருக்க வேண்டுமா என்று பலரும் சன்னா மரினுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகின்றனர். இந்த விவாதம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..வேறு நபருடன் உடலுறவு.. ஆண்களை முந்திய பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios