பாகிஸ்தான் அரசின் பணத்தில் இந்திய காஷ்மீர் பகுதிக்குள் பயணம் - இல்ஹான் உமர் குறித்த வெளியான பகீர் தகவல்!

இந்தியாவை பல்வேறு மேடைகளில் எதிர்த்து பேசிய வரும் சோமாலி-அமெரிக்க அரசியல்வாதியான இல்ஹான் ஓமர் என்ற பெண், பாகிஸ்தான் அரசின் பணத்தில், இந்தியப் பகுதியான காஷ்மீருக்குச் சென்றதாக இஸ்ரேல் நாட்டின் வார் ரூம் திடுக்கிடும் தகவல் ஒன்றை தங்களது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Financial Disclosure explains that ilhan omar took a free trip to indian region of kashmir and qatar wc says isreal war room

யூத நாட்டில் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களை பலமுறை சாடி மற்றும் தாக்கி பேசும் இல்ஹான் உமர், கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த FIFA உலகக் கோப்பைக்கு இலவச பயணம் மேற்கொண்டதாக அந்த இஸ்ரேல் வார் ரூம் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளின் உதவியுடன் இல்ஹான் உமர் இதனை தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

INS Vindhyagiri : ப்ராஜெக்ட் 17A.. அதிநவீன போர்க்கப்பல்.. அறிமுகம் செய்த ஜனாதிபதி திரௌபதி முர்மு - முழு விவரம்

பாகிஸ்தான் அரசின் நிதியுதவியுடன், இல்ஹான் உமர், காஷ்மீரின் இந்தியப் பகுதிக்கும் சென்று வந்ததாகவும் அந்தப் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்து மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரை தொடர்ந்து துன்புறுத்துகின்றனர் என்றும். அவர்கள் எப்போதும் பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தைப் பற்றி அனைவருக்கும் அறிந்த ஒரு விஷயம் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

சில காரணத்திற்காக இல்ஹான் உமர் அடிக்கடி பாகிஸ்தானின் ஏஜெண்டாக வேலை பார்க்கிறார் என்று இஸ்ரேல் வார் ரூம் வெளியிட்ட பதிவில் ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தின் போது, ​​உமர் சில பாகிஸ்தான் ஏஜெண்டுகளுடன் சேர்ந்து இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றார், ஆனால் அதில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. பின்னர் உமர் இந்தியப் பிரதமரின் வருகையைப் புறக்கணிக்க முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2022 

ஏப்ரல் 2022ல் இல்ஹான் உமர் காஷ்மீருக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இந்திய வெளியுறவு அமைச்சகம் அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த பயணம் அவரது குறுகிய மனப்பான்மை மற்றும் அரசியலை பிரதிபலிக்கிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியிருந்தார்.

யார் இந்த இல்ஹான் உமர்

இல்ஹான் ஓமர் ஒரு சோமாலி-அமெரிக்க அரசியல்வாதி ஆவார், அவர் 2019ல் அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக பதவியேற்றார். அமெரிக்க காங்கிரஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு முஸ்லிம்-அமெரிக்க பெண்களில் இவரும் ஒருவர். காங்கிரஸில் உறுப்பினரான முதல் ஆப்பிரிக்க அகதியும் இவர்தான். ஆனால் இல்ஹான் உமர் தனது சர்ச்சைக்குரிய அறிக்கைகளால் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பிடிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல இஸ்லாமிய நாடுகள் இல்ஹான் ஒமரை ஆதரிக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நீட் தேர்வு இருக்கும்... ரத்து செய்ய முடியாது- திமுகவை விளாசும் அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios