குத்துசண்டை போட்டியில் டிசர்ட்டை கழட்டி வெற்றியை கொண்டாடிய வீராங்கனை - வைரல் வீடியோ !
குத்து சண்டை போட்டியில் வெற்றி பெற்ற பெண் ஒருவர் மகிழ்ச்சியில் தனது டி சர்ட்டை கழட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விளையாட்டில் வெற்றி பெற்ற பிறகு வீரர்கள் அல்லது அணிகள் கொண்டாடுவதை நாம் பார்த்திருப்போம். UEFA பெண்கள் EURO 2022ல் நடைபெற்ற ஒரு நிகழ்வு வைரலாகி வருகிறது. ஒரு கால்பந்து வீராங்கனை கோல் அடித்த பிறகு தனது டி-சர்ட்டை கழற்றி கொண்டாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது.
ஆனால் அந்த வீடியோ சர்ச்சையை கிளப்பவில்லை. குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தனது டி-சர்ட்டை உயர்த்தினார். 35 வயதான பெண் கிக் குத்துச்சண்டை வீராங்கனை டேய் எமிரி தனது முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பிறகு, தன்னுடைய சட்டையை உயர்த்தினாள்.
இதையும் படிங்க..“இனி 1 மணி நேரத்துக்கு முன்னாடியே போகலாம்.. ரயில் பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு !”
35 வயது பெண் குத்துச்சண்டை வீராங்கனை செய்த இந்த செயலை செய்வதை கண்டு அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். தற்போது இவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது.அதில் ஒரு பெண் கால்பந்து வீரர் கோல் அடித்தவுடன் தனது டி-சர்ட்டை கழற்றினார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.
இது UEFA மகளிர் யூரோ 2022 போட்டியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஜெர்மனியை வீழ்த்தியது. இந்த வீராங்கனையின் பெயர் கிளே கெல்லி. க்ளூ கெல்லி முதல் கோல் அடித்ததால், தனது முழு டி-ஷர்ட்டைக் கழற்றிவிட்டு மைதானத்தில் ஓடத் தொடங்கினார். இது போன்ற நிகழ்வுகள் வழக்கம் தான் என்று விளையாட்டு ரசிகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?