கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலை பதிவிட்டது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு, சுமார் ஒன்றே முக்கால் கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் சுமார் 50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தநிலையில், தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பேட்டி  ஒன்றை பதிவியிட்டிருந்தார். அதில், குழந்தைகளுக்கு வலுவான எதிர்ப்பு சக்தி உள்ளதால், கொரோனா எளிதில் அவர்களுக்கு பரவாது என்று கூறியுருந்தார். மேலும், பள்ளிகள் திறக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார். அவரது கருத்து முற்றிலும் தவறானது என மருத்துவ நிபுணர்கள் அறிவித்தனர்.
 
இந்நிலையில், கொரோனா குறித்து தவறான தகவலை பதிவிட்டதால், டிரம்பின் தேர்தல் பிரசார டுவிட்டர் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது. அதேபோல், கொரோனா குறித்த டிரம்ப்பின் தவறான பதிவை, முதன்முறையாக பேஸ்புக் நிறுவனமும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.