எத்தியோப்பியாவில் இருந்து கென்ய தலைநகர் நோக்கிச் சென்ற எத்தியோப்பின் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 157 பயணிகளும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. இதில் 149 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் உட்பட 157 பேர் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. 

இதனையடுத்து நைரோபி செல்லும் வழியில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 149 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்துள்ளது. இந்த விமானத்தில் பல இந்தியர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. 

இந்த விபத்து இன்று காலை உள்ளூர் நேரப்படி 8.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. விபத்தில் நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்ப்பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரோடு இருப்பவர்கள் குறித்த எந்தவிதமான உறுதியான தகவலும் இல்லை " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.