அமைதிக்கான நோபல் பரிசை பெறும் எத்தியோப்பியா பிரதமர்..! தேர்வுக்குழு அறிவிப்பு..!
எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, வேதியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2019ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை பெறுபவராக எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2018 ஏப்ரல் மாதம் அந்நாட்டின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றவர் அகமது அலி.
எத்தியோப்பியாவின் அண்டை நாடான எரிட்ரேயாவுடன் சமரச பேச்சு வார்த்தைகளை ஏற்படுத்தி அதில் வெற்றி கண்டு மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பாடுபட்டதற்காக அபி அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.