உலகின் மிக நீண்ட கால மன்னராட்சிக்கு சொந்தக்காரர் என்ற பெருமையை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார்.

தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெஜ் (88) நேற்று முன் தினம் காலமானார். கடந்த 1946-ல் அரியணை ஏறிய அவர் 70 ஆண் டுகள், 4 மாதங்கள் மன்னராக நீடித்தார். உலகின் மிக நீண்டகால மன்னராக அவர் விளங்கினார்.

அவரது மறைவைத் தொடர்ந்து அந்தப் பெருமை தற்போது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கிடைத்துள்ளது. 90 வயதாகும் அவர் 1952-ம் ஆண்டு இங்கிலாந்தின் ராணியாக பதவியேற்றார். அவர் 64 ஆண்டுகள் 8 மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள சுவாசிலாந்தின் மன்னராக இருந்த சவுபுஸா, 4 மாத குழந்தையாக இருந்தபோது முடிசூட்டப்பட்டார். அவர் 82 ஆண்டுகள் 253 நாட்கள் பதவியில் இருந்தார். அவர்தான் உலகின் மிக நீண்டகால மன்னர் ஆவார். கடந்த 1982-ம் ஆண்டில் அவர் உயிரிழந்தார்.