கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு இளவரசர் சார்லஸ் செய்த காரியம்..!! 71 வயசிலும் இப்படியா..??
அதேபோல லண்டனில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக கருதப்படும் பர்மிங்காமில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார் .
கொரோனாவிலிருந்து மீண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் லண்டனில் சுமார் நான்காயிரம் பேர் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்து வைத்தார் . தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார் . கொரோனா வைரஸ் உலகளவில் வேகமாக பரவி வருகிறது . இந்நிலையில் இங்கிலாந்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் , இதுவரை அங்கு 3 ஆயிரத்து 605 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் இங்கிலாந்தில் மக்களுக்குப் போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் அரசு அவசரகதியில் மருத்துவ படுக்கைகளை அதிகரித்து வருகிறது. சுமார் 500 படுக்கை வசதிகள் கொண்ட நைட்டிங்கேல் மருத்துவமனை தற்போது நான்காயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது .
வென்டிலேட்டர், மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசிதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது , இதே போல் இங்கிலாந்து முழுவதும் அவசர கதியில் ஆறு மருத்துவமனைகள் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இளவரசர் சார்லஸ் தேசிய மாநாட்டு மையங்கள் தற்போது மருத்துவமனைகளாக மாற்றம் பட்டு வருகிறது இது அவ்வளவு சாதாரண காரியமல்ல , ஆனால் தற்போது ராணுவத்தின் உதவியுடன் இது செய்து முடிக்கப்பட்டுள்ளது . தற்போது 9 லட்சம் சதுர அடிக்கு பரப்பளவு கொண்ட எக்ஸ்செல் மையம் அதாவது கடந்த 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்ட மைதானம் தற்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார் . எதிர்காலத்தில் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இம்மருத்துவமனைகள் அவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார் . அதேபோல லண்டனில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக கருதப்படும் பர்மிங்காமில் 3 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார் .
அதேபோல் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோவில் மற்றொரு தற்காலிக மருத்துவமனை உருவாகி வருகிறது என்ற அவர் அது ஆரம்ப கட்டத்தில் சுமார் 300 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வசிதிகள் கொண்டதாக அமைய உள்ளது என்றார், பின்னர் தேவைக்கு ஏற்பட விரிவு படுத்தப்படும் என்றார். 71 வயதாகும் இளவரசர் சார்லஸ் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது வீடியோ கான்பரன்சிங் மூலமாக மருத்துவமனையை திறந்து வைத்துள்ளதுடன், தன்னுடைய உடல்நிலை குறித்தும் சில தகவல் பகிருந்து கொண்டார் அதாவது, " மற்றவர்களை காட்டிலும் நான் மிகவும் அதிர்ஷ்டமானவன் ஏனெனில் எனக்கு ஏற்பட்ட காய்ச்சல் மிக லேசானது , மற்றவர்களைப் போல கடுமையாக நான் பாதிக்கப்படவில்லை , கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களும் விரைவில் அதிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ உதவி கிடைக்கும் என்ற தகவல் தன்னை நிம்மதி அடைய வைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார் .