Asianet News TamilAsianet News Tamil

உக்ரைனில் இருந்து இந்திய மக்கள் வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!!

உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இங்குள்ள இந்திய பிரஜைகள் உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

embassy of india has requested the Indians to leave ukraine immediately
Author
First Published Oct 26, 2022, 9:18 PM IST

உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இங்குள்ள இந்திய பிரஜைகள் உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அங்குள்ள பல்வேறு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. அதில் பல இடங்களில் உருக்குலைந்து போயுள்ளன. இதை அடுத்து அங்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் அனைவரும் விமானம் மூலம் பாதுகாப்பாக இந்திய அழைத்து வரப்பட்டன. உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் தற்போது தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.

இதையும் படிங்க: ரிஷி சுனக் மட்டும் கிடையாது மக்களே.! உலகை கலக்கும் 15 இந்தியர்கள் யார் யார் தெரியுமா ?

இதை அடுத்து உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இங்குள்ள இந்திய பிரஜைகள் உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுக்குறித்து அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து இந்திய பிரஜைகளும் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். உக்ரைனில் பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவதால், இந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரிஷி சுனக் அமைச்சரவை: பிரதமரின் உயர்மட்ட அணியில் யார்?

முன்னதாக கடந்த 19ம் தேதி இதே போன்று உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும், உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, சில இந்திய பிரஜைகள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக தூதரகம் தெரிவித்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் இந்திய பிரஜைகளுக்கு தூதரகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios