போரால் நிலங்களை இழந்து தவித்த இலங்கை தமிழர்கள்..! அதிரடியாக நடவடிக்கை எடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்
போர் காரணமாக நிலங்களை இழந்து பல ஆண்டுகாலாமாக போராட்டத்தில் ஈடுபட்ட வந்த இலங்களை தமிழ் மக்களுக்கு, இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்ற நிலையில் நிலங்களை மீட்டு கொடுத்துள்ளார்.
இலங்கையில் பல வருடங்களாக நடைபெற்று வந்த போர் கடந்த 2010ஆம் ஆண்டு நிறைவு அடைந்தது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிர் இழந்தனர். முக்கியமாக இலங்கை கிழக்கு மாகாணம் திருக்கோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலகப் பிரிவு பகுதியில் போர் காரணமாக பாதிக்கப்பட்டு ஏராளமானோர் தங்களது நிலத்தை விட்டு இடம்பெயர்ந்தனர். இந்தநிலையில் போர் முடிவடைந்த நிலையில் தங்களது நிலங்களை மீட்க பல வருடங்களாக தமிழக மக்கள் நிலம் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். நிலங்களை இழந்து தவித்த மக்கள் தங்களுடைய சொந்தமான நிலம் கிடைக்குமா? என காத்துகிடந்தனர். இந்தநிலையில் 700 தமிழ் குடும்பங்களுக்கு நிலம் மீட்பு விவகாரத்தில் நல்ல முடிவு கிடைத்துள்ளது.
நிலங்களை மீட்டு தருமாறு பல முறை முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஆளுநர்களின் கவனத்திற்கு கொண்டு தமிழ் மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிலப்பிரச்சனையில் எவ்வித முடிவும், பலனும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இடைவிடா முயற்சியின் பயனாக வெருகல் பிரதேச பிரிவில் வாழும் 700 தமிழ் குடும்பங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலம் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பதவியேற்று குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் காணி உரிமை பிரச்சனையில் ஆளுநர் செந்தில் தொண்டமான் எடுத்துள்ள நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.