வியாழன் அன்று ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஒரே மாதத்தில் ஏற்பட்டுள்ள 4வது நிலநடுக்கம் ஆகும்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கடந்த 30 மாநாட்களுக்குள் நான்காவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறியுள்ளது. வியாழன் அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் அதிகாலை ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாலை 1.09 மணி அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய அண்டைநாடுகளிலும் உணரப்பட்டது. இந்நிலநடுக்கம் தஜிகிஸ்தானில் இருந்து 33 கி.மீ. தூரத்தில் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி, குறைந்தது 50 பேர் காயம்
கடந்த 7ஆந்தேதி ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 4,000 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன என்று ஆப்கனில் ஆட்சியில் இருக்கும் தாலிபன் அரசு கூறியுள்ளது. 20 கிராமங்களில் 1,983 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன என்று அந்நாட்டு பேரிடர் மேலாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 11ஆம் தேதி ரிக்டர் அளவில் 6.1 வரை பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பின், 13ஆம் தேதி ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 வரை பதிவானது. 15ஆம் தேதி 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானை உலுக்கியது.
தொடர்ந்து இந்த மாதத்தில் 4வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் ஆப்கானிஸ்தான் மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். சமீபத்திய நிலநடுக்கங்களால் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்த முழுமையான விவரம் உடனடியாக வெளியாகவில்லை.
ஆதார் கார்டு பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது எப்படி? ஈசியான வழி இதோ...
